பயணம் -7

Start from the beginning
                                    

என தன் மனதிற்குள் பல கவிதைகள் ஓட, இவனா எனக்கு பிடிச்சிருக்கு, இல்லவே இல்ல, ஏதோ ஒரு அட்ராக்சன் அவ்வளவு தான், அவன் நமக்கு எப்பவும் எதிரி தான் என தன் மனதிற்கு மறுபதில் கூறிவிட்டு தன் வீட்டிற்குள் சென்றாள் ராணி.

"ராணி, நீங்க நாளைக்கே கிளம்பனுமாம், ராதிகா வந்து சொல்லிட்டு போனாள், வனத்துறை அதிகாரி கிட்ட ஏதோ ஸ்பசல் பர்மீசன் வாங்கி இருக்காங்களாம், மூனு நாளைக்கு ஜூப்-லயே போயிட்டு சுத்தி பார்க்கலாமாம், அப்புரம் இரண்டு நாள் நடராஜா சர்வீசாம், என்ன ஜாலியா? என வினாவினாள் ராணியின் அம்மா.

"சூப்பர் மா, ஜாலி தான், நான் தான் கேங் (gang) லீடர், அதனால எனக்கு நிறைய வேலை இருக்கு அம்மா, இன்னைக்கு என்னை தேடாத, நான் ரொப்ப பிஸி, ரொம்ப ரொம்ப பிஸி.... சொல்லிட்டேன்" என கூறிவிட்டு ராணி சிட்டாய் வெளியே பறந்தாள்.

ராகினி வீட்டை அடைந்த ராணி, தன் வண்டியின் ஆரனை தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தாள்.

"இதோ வரேன் டி, ஒரு நிமிசம் ...." என ராகினி குரல் கொடுக்க வண்டியை ஆப் செய்துவிட்டு ராகினி வீட்டு திண்ணையில் அமர்ந்தாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ராகினி வர, இருவரும் கடைத்தெருவிற்கு சென்றனர்.

ஐந்து நாட்களுக்கு தேவையான பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கினர், பின்னர் இனிப்பு, காரம் என அனைத்தும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர்.

"ராகினி வீட்ல சொல்லிடு நாளைக்கு காலையில பத்து மணிக்கு கிளம்பரோம், அப்பா கூட என் வீட்டுக்கு வந்துடு, நாம அங்க இருந்து கிளம்பிடலாம். முக்கியமான விசயம் என் வீட்டுக்குள்ள நாளைக்கு உன் அப்பாவ கூட்டிட்டு வராத, ரோட்டுலயே இறங்கிக்கோ, உள்ள வந்தாருனா எங்கம்மா நம்ப ட்ரிப்ப பத்தி பேச்சு வாங்குல சொல்லுடுவாங்க" என எச்சரித்தாள் ராணி.

"ஓ.கே டி" என பதில் கூறிவிட்டு தன் வீட்டிற்குள் ராகினி நுழைய, மின்னல் வேகத்தில் வண்டியில் தன் வீட்டிற்கு வந்தடைந்தாள் ராணி.

"என்னடி பர்சேஸ் ஓவரா? " என சாவித்திரி கேட்க,
"இதோ வரேன் மா, ராதிகா அக்கா கிட்ட நான் வாங்கின லிஸ்ட கொடுத்துட்டு வரேன்" என கூறிவிட்டு கிளம்பினாள் ராணி.

ராஜாவின் வீட்டிலும் சுற்றுலா வேலைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தது, வீட்டில் கதவு மூடி இருந்ததால் காலிங் பெல் அடித்தாள் ராணி.

"ராஜா, கதவ திறந்து யாருனு பாருப்பா..." என ராதிகா குரல் கொடுக்க, ராஜாவும் சென்றான்.

"வீட்டில் யாரும் இல்லையோ?, என யோசித்துக்கொண்டே பின்பக்கம் திரும்பி கதவில் ஒற்றைக் கால் கதவில் வைத்துக்கொண்டு ஒற்றைக் கால் தரையில் ஊன்றி நின்றுக்கொண்டே, தன் தொலைபேசி எடுத்து ராதிகா நம்பரை எடுத்தாள்.

அதற்குள் கதவை திறந்தான் ராஜா, கதவில் சாய்ந்திருந்த ராணி அப்படியே கீழே விழப்போக, அவளை விழாமல் தாங்கி பிடித்தான் ராஜா.

என்ன நடக்கிறது, செய்வதறியாமல் விழித்தால் ராணி. அவளை நேரே நிருத்திவிட்டு, வேகமாக தன் அறைக்குள் சென்றுவிட்டான் ராஜா.

ராணியின் இதயத்துடிப்பின் வேகத்தை அவளாள் நன்றாக உணர முடிந்தது, எவ்வாறு வெளிப்படுத்துவது என தெரியாத ஒரு உணர்வு, தன்னை சற்று சிரமப்பட்டு சமன்நிலைக்கு கொண்டு வந்தாள் ராணி.

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)Where stories live. Discover now