செல்போன் + முகநூல்= ???

125 28 30
                                    


"கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போம்மா , மதியம் ஆகறதுக்கு முன்னமே ரொம்ப பசிக்கும்" வாஞ்சனையுடன் பேசிகொண்டிருந்தாள் மரகதம். தான் வைத்த சாந்து பொட்டை சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு ஒன்பது முறை சரி படுத்தி விட்டு அம்மா சொல்வதை அலட்சிய படுத்திவிட்டு தன் அலங்காரத்திலே குறியாக இருந்தாள் கவிதா, மரகதமும் தன் கணவர் இறந்த பிறகு தன் மூன்று பிள்ளைகளையும் வளப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். மூத்தவள் கவிதா பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத செல்பவள் குடும்பத்தின் கடமைகள் அனைத்தும் இவளை நோக்கி தான் இருக்கிறது என்பதை அறியா விளையாட்டு பிள்ளை, இளையவள் கலையரசி பதினொன்றாம் வகுப்பு படிப்பவள் தந்தையை போலவே குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் வயதிற்கு மீறிய பொறுப்பும் நிறைந்தவள். கடைசி கடைக்குட்டி ரவி ஆறாம் வகுப்பு படிப்பவன், மூவரும் அரசு பள்ளியில் படிப்பவர்கள் எப்பொழுதும் கலையரசியும் ரவியும் ஒன்றாக தான் பள்ளிக்கு செல்வார்கள் கவிதா எப்பொழுதும் ஸ்பெசல் கிளாஸ் எனச்சொல்லி அவசர அவசரமாக கிளம்பி பள்ளிக்கு செல்லாமல் தன் சக தோழிகளுடன் நன்றாக ஊரை சுற்றிவிட்டு கால தாமதமாகவே எப்பொழுதும் பள்ளி செல்வாள்.
மரகதம் தன் வீட்டின் அருகில் உள்ள பஞ்சாலையில் இரவு நேர பணி செய்பவள் காலையில் ஒரு நான்கு வீடுகளுக்கு சென்று முறைவாசல் செய்து கொடுப்பாள், கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து தன் குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்து வருபவள். கணவன் விபத்தில் இறந்ததால் அதிலிருந்து கிடைத்த இருபத்திஐந்தாயிரம் பணத்தை வங்கியில் பத்திரமாக வைத்திருக்கிறாள் இப்போதைக்கு இது மட்டுமே இவர்களின் சொத்து.

தேர்வு தாள்கள் கொடுக்கபட்டு இருந்தன பன்னிரண்டாம் வகுப்பில் கவிதாவின் பெயர் வந்ததும் கொஞ்சம் பயத்துடனே முன்னர் நகர்ந்தால் . ''நீயெல்லாம் பாஸ் ஆகவே மாட்ட உன் தங்கச்சிய பாரு எப்பவும் கிளாஸ்ல அவதான் முதல் மார்க்'' கவிதாவுக்கு இதை கேட்கும் போதுகோபம் அதிகமாகவே வந்தது , வழக்கம் போல் வழியில் விற்கபட்ட மசால் பொறியை வாங்கி சாப்பிட்டு பேசிய படி வீட்டிற்கு வந்தால் , ஏன் கவிதா எங்களுகெல்லாம் இந்த மசால் உணவை வாங்கி கொடுக்க பணம் ஏது உனக்கு? ? நேத்து தான் எங்கம்மாகிட்ட பரிச்சைக்கு பணம் கட்டனும் சொல்லி ஐம்பது ரூபாய் வாங்கினேன் என் சிரித்தபடி சொல்லி நடந்தாள். கலையரசி கவிதாவிற்கு முன்னரே வீட்டிற்கு வந்து வீட்டை பெருக்கி, பாத்திரம் கழுவி படிக்க உட்காந்திருந்தாள் கவிதாவுக்கு கலையரசியை பார்த்ததும் தன் கணக்கு வாத்தியார் தன்னை திட்டியது நினைவுக்கு வந்தது திடிரென்று எப்படி அவளிடம் கோபத்தை காட்ட என யோசித்தவளுக்கு துணுக்காக கிடைத்தது அவளின் ஆடையை கலையரசி போட்டிருந்தாள்... கோபத்துடன் தலையில் ஓங்கி குட்டி விட்டு ஏண்டி என் டிரஸை போட்டிருக்க என்று திட்டிவிட்டு போய்விட்டாள், கலையரசி என்ன செய்வதென்று தெரியாமல் அழுதபடி படித்தாள்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Feb 15, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

செல்போன் + முகநூல்= ???Where stories live. Discover now