1.தீயை சுடு

308 11 2
                                    


                                          அறிமுகம்

"சந்திரா?"

லேப்டாப்பில் இருந்து கண்ணை விலக்கி திரும்பிப் பார்த்தான். படுக்கையில் மரணத் தருவாயை எதிர்நோக்கி காத்திருந்த அவன் தாத்தா குலசேகரர் மட்டுந்தான் அவனை சந்திரா என அழைப்பார். இவன் பிறந்தபோது இவனை பார்த்த முதல் முறையிலிருந்து இவனை அப்படித்தான் அழைப்பதாக அவன் தந்தை கூறியுள்ளார். அதன் நவீனத்துவமாகத் தான் அவனுக்கு சந்துரு என பெயரிட்டார் அவன் தந்தை இராஜசேகர்.

"என்ன சேகர் ?"

அவன் தாத்தாவை அப்படி கூப்பிட்டதும் குலசேகரர் முகத்தில் சிறு புன்னகை.

"ஸ்டோர் ரூமுக்கு என்னை கூட்டிட்டு போ., "

சந்துரு மறு வார்த்தை பேசவில்லை. பக்கத்தில் கிடந்த வீல்சேரில் அவரை கிடத்தி விட்டு அமைதியாக தள்ளிக் கொண்டே போனான். அது முன்னூறு வருடம் பழமையான வீடு. அந்த வீடு மாமல்லபுரத்திற்கு மிக அருகில் அமைந்த ஊர். அவ்வீட்டை விட பழமையான பல வீடுகள் இருந்தன. அவற்றில் அவனது வீடு தான் பெரியது, நிச்சயம் அந்ததால ஜமின்தாரின் மாளிகை என பார்ப்போர் எண்ணுவர் . ஆனால் அவ்வபோது பழையன கழிந்தும், புதியன புகுந்தபடியும் இருந்ததில் இந்த மிஸைல் யுகத்தின் எல்லா புதிய அறிவியல் கண்டுபிடிப்பின் கருவிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

அந்த வீடு தான் அவனை ஆர்கிடெக் துறையில் சேர தூண்டுகோலாக அமைந்தது. அதுவும் இந்தியாவின் முன்னனி கல்லூரிகளில் முக்கியமான இடத்தை பிடித்த ஜே.ஜே.ஆர்க்கிடெக் - மும்பை கல்லூரியில் சேரும் வரை அவன் நிலை நரகத்தில் இருந்தபடி கிடந்தான். நல்லபடியாக கல்லூரி முடிந்து விட்டது. ஆனால் அது பிரச்சனையல்ல. டோக்கியோ யுனிவர்சிட்டி - ஜப்பானில் இருந்து வந்த சிறந்த கட்டிடகலை திறனாய்வு போட்டிக்கான அறிவிப்பை பார்த்ததிலிருந்து அதன் Rules and regulationஐ 748 முறையாக நேற்றிலிருந்து படித்து விட்டான்.

ரகஸ்யம் Where stories live. Discover now