OS : part 1
Same as ps characters:
But slight changes:
PS: அதே லாலா family
முல்லை family : same but ps familyகு relation இல்லை
மீனா : ஜனா lak மா தம்பி, jm கு as usual சின்ன வயசுல marriage னு முடிவு பண்ணிருப்பாங்க , ரெண்டு family கும் சண்டை 😁😁, மீனா ஜீவா பின்னாடி சுத்தும், கதிருக்கு சுத்தமா பிடிக்காது❤❤, கதிர் மீனாவை திட்டிகிட்டே இருப்பார்☺☺, மீனா கதிர் கிட்ட வம்பு பண்ணிட்டே இருப்பா 😏😏....
கதிர் பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு கடைக்கு சென்று விட்டார். பின்னர் அவ்வப்போது அவன் நண்பரின் வீட்டிற்கு சென்று வருவான். கதிரின் நெருங்கிய நண்பன் செந்தில். செந்தில் 12ஆம் வகுப்பு முடித்து B.Sc join பண்ணி விட்டு டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தான். அங்கு முல்லை பத்மா இருவரும் படிக்க வருவார்கள்...
செந்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே டியூஷன் எடுப்பார். செந்திலுக்கு பரீட்சை, முக்கியமான வேலை, வரும்போது கதிர் வந்து பார்த்துக் கொள்வான். அதன் பொருட்டு கதிர் அவ்வப்போது கணக்கு பாடங்களை முல்லைக்கும் பத்மாவிற்கும் சொல்லித் தருவார்...
முல்லைக்கும் பத்மாவிற்கும் கதிரையும் செந்திலையும் மிகவும் பிடிக்கும், ஏனெனில் இருவரும் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள், ஆனால் சரிவர பேசிக்கொள்ள மாட்டார்கள். ஏதேனும் சந்தேகம் என்றால் பத்மா மட்டுமே கதிரிடம் கேட்பார். முல்லையின் சந்தேகத்தையும் பத்மாவே கேட்டு இருவரும் தெரிந்து கொள்வார்கள். கதிர் கேட்பதற்கு பதில் சொல்வதோடு சரி வேறு எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்....
ஒரு நாள் முல்லையும் பத்மாவும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்கள், அங்கு இன்னொரு பெண்ணும் வந்து நின்றாள், இருவரும் வெகு நேரம் நிற்பதால் நிழற்குடையில் சென்று அமர்ந்தார்கள். அந்தப் பெண் மட்டுமே ரோட்டின் அருகாமையில் நின்று இருந்தார். அப்போது கதிர் அங்கு வந்து அந்தப் பெண்ணிடம் ஒரு கடிதத்தை நீட்ட .....
