வாழ்க்கை பயணம்

46 7 15
                                        

இருட்டறையில் இருந்து
இருட்டறையை நோக்கி
இயந்திரமாய் பயணிக்கும் ஓர்
இனிமையான பயணம்
இமை மூடும் நேர
இடைவெளியிலும் மாற்றம் தரும்
இதமான பயணம்

முடிவுகளில்லா முடிவுகளை நோக்கி
முதலடி வைத்து
முன்னோக்கிய பயணம்
திரும்பி பார்த்தாலும்
திருத்த முடியாத
திருப்புமுனைகளை கொண்ட பயணம்

மின்னும் விழிகளில் கண்ணீரும்
முகத்தில் புன்னகையும்
மாறிமாறி வரும்
மாய பயணம்
வெட்டவெளியில் நின்று பார்த்தால்
விடை கிடைக்கா
வினாக்கள் சுற்றும்
விசித்திர பயணம்

துயரம் துரத்த
தன்னம்பிக்கை உயர்த்த
துரோகம் கடுக்க
நட்பு மணக்க
நிரந்தரமற்ற பயணம்

கானும் கனாக்கள்
கண் முன்னே உடைந்து போக
கனவிலும் காணாத
கதவுகளை திறந்து
அதிசயிக்க வைக்கும்
அற்புத பயணம்

விழிகளில் சந்தித்து
வலிகளில் முடியும்
சிரிப்புகளில் சந்தித்து
வெறுப்புகளில் முடியும்
உறவுகளாய் சந்தித்து
பிரிவுகளாய் முடியும்
புதிரானதோர் பயணம்

உறவுகளுக்கும்
உணர்வுகளுக்கும்
உதாசீனங்களுக்கும்
உட்படும் ஒரு பயணம்
உயர்ச்சியும் வீழ்ச்சியும்
உதவிகளும் பதவிகளும்
உருவமாய் கொண்ட பயணம்
நம் வாழ்க்கை பயணம்....



















You've reached the end of published parts.

⏰ Last updated: May 07, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

வாழ்க்கை பயணம்Where stories live. Discover now