17 தொழிலதிபர்கள் கூட்டம்

Começar do início
                                    

"அவங்க மயங்கிட்டாங்க" என்றான் மயக்கத்தில் இருப்பவனை போல. அவனை பார்த்தால், நேற்று நிகழ்ந்த விஷயத்தில் அவன் மொத்தமாய் மூழ்கிவிட்டது போல் தெரிந்தது.

"அடக்கடவுளே... அப்புறம் அவங்களை நீ எப்படி வெளியே கொண்டு வந்த?"

"தூக்கிகிட்டு வந்தேன்"

குகனின் கண்கள் மின்னியது, *நிஜமாகவா...?* என்பதைப் போல. அப்படி என்றால், மாலினியை வெறுப்பேற்ற மிதிலா கூறிய கதை பொய் அல்ல.

"அப்புறம் என்ன ஆச்சி?"

"அவங்களுடைய சுகர் லெவலை பேலன்ஸ் பண்ண, அவங்களுக்கு தேனை ஊட்டி விட்டேன்"

"என்னது... ஊட்டி விட்டியா?" என்று கத்தினான் நம்பமுடியாத அதிர்ச்சியுடன்.

அவனுடைய கத்தல், ஸ்ரீராமை மீண்டும் பூவுலகத்திற்கு இழுத்து வந்தது. அவனைப் பார்த்து கிண்டலாய் சிரித்தான் குகன். தான் உளறிக் கொட்டிவிட்டதை உணர்ந்தான் ஸ்ரீராம்.

"என்ன?" என்றான்

ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தான் குகன் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

"நாங்க கான்ஃபரன்ஸ்க்கு போறோம்"

"நாங்களா? யார் கூட போற எஸ்ஆர்கே?" என்றான் அவனுக்கு அதைப் பற்றி தெரியாததைப் போல.

"மிஸ் ஆனந்த் என்கூட வராங்க"

"ஆனா, அது ஒரு பிசினஸ்மென் கான்ஃபரன்ஸ். அங்க மிதிலா என்ன செய்யப் போறாங்க?"

"பிசினஸ்மென் கான்ஃபரன்ஸ்னா என்னன்னு அவங்களுக்கு தெரியாதுல்ல...?. அவங்க அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நான் நினைக்கிறேன்"

"ஓஓஓஓ..." என்று புருவத்தை உயர்த்தினான் குகன்.

"நௌ, கெட் அவுட்"

"ஓகே " என்று சிரித்தபடி அவனது அறையில் இருந்து வெளியேறினான் குகன். அங்கிருந்து நேராக மிதிலாவிடம் சென்று அவளை சீண்டி பார்க்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால், கான்ஃபரன்ஸ்க்கு செல்ல ஸ்ரீராம் படியிறங்கி வருவதை பார்த்து, அமைதியாய் தனது அறைக்குச் சென்றான்.
........

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Onde histórias criam vida. Descubra agora