மனம்  அவனோடு  சேர்ந்து  கைக்கோர்த்துக்கொண்டு  உலவவேண்டும் என  விருப்பம்தெரிவித்தாலும்  சுற்றுப்புறம்  கருதி  தன்   ஆசைக்கு  சற்றுநேரம்  அணைக்கட்டி  வைத்தாள் அவள். 

               இப்படியே  சிறிது  நேரம்  சென்றுகொண்டிருக்க  விஷ்ணுவை  நோக்கி  வந்த  வேலையாள்  மூர்த்தி “ தம்பி … ஐயா  உங்களை  எல்லாம்  கோவிலுக்கு  உள்ள  கூப்பிட்டாரு...  சாமி  கும்பிட  டைம்  ஆகுதாம் என்று  கூறி  கையோடு  அழைத்தும்  சென்றான் . 

                  பிரகாரத்திற்கு  அவர்கள்  வந்து  சேரவும்   கருவறையில்  அர்ச்சகர்  அர்ச்சனையை  ஆரம்பித்தார் .  அவர்  காட்டிய  கற்பூரஜோதியில்  ஜ்வாஜல்யமாக  ஜொலித்த அந்த  மரகதலிங்கத்தைப்  பார்க்க   பார்க்க மனத்தினுள்  அழுத்திக்கொண்டிருந்த  வலியயெல்லாம்  தொலைந்துபோய்  இறகினால்  வருடியது  போன்ற  இதம் அனைவரையும்  ஆட்கொண்டது . 

                  ஒரு  சிறு  புன்னகை  உதட்டினில்  தவழ  விஷ்ணுவைப்  பார்த்துக்கொVண்டிருந்த  ஈஷ்வரபாண்டியனின்  எண்ணம்   ஒருவாரத்திற்கு  முன்னர்  நடந்த நிகழ்வில் சுழன்று  கொண்டிருந்தது . 

தன் கையில் கூரிய ஆயுதத்துடன் ஈஷ்வரபாண்டியனின் மயக்கத்தை தெளிவித்துக் கொண்டிருந்த விஷ்ணுவத் தாக்க எத்தனித்த வருணை திடீரென வலிமையான இரண்டு கரங்கள் அவனைப் பின்புறமிருந்து அவனைப் பிடித்து இழுத்து அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது.

அதிர்ந்துபோய் அந்த கரத்திற்கு உர்யவனைப் பார்த்து உறைந்து நின்றான்  வருண். தனக்கு பின்புறம் நடக்கும் களேபரத்தின் சப்தம் கேட்டு திரும்பிய விஸ்ணுவிற்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.

ரௌத்திரத்தில் விழிகள் இரண்டும் சிவந்திருக்க கை நரம்புகள் புடைக்க முன்ஜென்மத்தில் ராஜசிம்மனாக அறியப்பட்ட ராஜீவே அங்கு வருணை அடித்துக்கொண்டிருந்தான்.

"டேய் துரோகி… இன்னும் அதே மூர்க்க எண்ணத்தோடயே இருக்கியே… சின்ன அளவுக்கு கூடவா உன் மனசுல நல்லது எது கெட்டது எதுன்னு யோசிக்கத் தெரியலை… இப்பவும் அதே கெட்ட சிந்தனையோட இருக்கியே இடியட்… " என்றவாறு வருணின் முகத்திலேயே ஆத்திரத்துடன் ஓங்கிக் குத்தினான் ராஜீவ்.

அது மட்டும் ரகசியம்जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें