02. மறுபிறவி

Começar do início
                                    

"இனிமேல் யார்கிட்டயாச்சும் சொல்லுவியா? நீயே பாரு, யாருக்காக செத்த மாதிரி நடிக்கிறாய்? இந்த குப்பை எல்லாம் யாருக்கு வேணும்! நான் எல்லாம் அடிச்சு உடைச்சிட்டன். இனி எப்பிடி என்னைப்பத்தி சொல்லுறாய்னு நானும் பாக்கிறன். சில வருஷமா கலைகளை படிச்சா நீ என்ன பெரிய ஆளா? தெரு நாயைப் போல துரத்தினப்போ எப்பிடி இருந்திச்சு?"

வேவூஷான் சோர்வாக நினைத்துக் கொண்டான்.

நான் வருஷக்கணக்கா செத்துப்போய் தான் இருந்தேன், அதனால நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

யார் இது?

நான் எங்கே இருக்கிறேன்?

நான் எப்ப அடுத்தவங்க உடலைத் திருடுற கேவலமான வேலையை செய்தேன்?

இளைய பிரபு தனது கோபம் குறையும் வரைக்கும் அவனை உதைத்தது மட்டுமல்லாமல் அறையில் இருந்த எல்லாவற்றையும் அழித்துவிட்டு தன் இரண்டு வேலைக்காரர்களுடனும் வெளியேறினான். அவன் போகும் போது கதவை பெரிய சத்தத்துடன் அடித்து சாத்திவிட்டு சென்றான். வெளியே அவன் உத்தரவு சத்தமாக கேட்டது.

"ஒழுங்கா பாருங்க. ஒரு மாசத்துக்கு அவனை வெளியே விட வேண்டாம். இல்லைன்னா அவனோட கோமளித்தனத்தால எல்லாரும் அசிங்கப்படணும்."

அவர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு அறை மீண்டும் நிசப்தமானது. வேவூஷான் எழும்ப முயற்சி செய்தான்.

எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவனுடைய அவயவங்கள் ஒத்துழைக்கவில்லை அதனால் மீண்டும் கீழே விழுந்தான். அப்படியே ஒருபக்கமாக சோர்வாக சரிந்து தனக்கு பழக்கம் இல்லாத இடத்தையும் நிலத்தில் கிடந்த குப்பைகளையும் சுற்றிச் சுற்றி பார்த்தான்.

கலவரத்தில் தூக்கி வீசப்பட்ட வெண்கல கண்ணாடி ஒன்று ஒருபக்கத்தில் விழுந்தது கிடந்தது. வேவூஷான் அதனை கையில் எடுத்தான். இரு கன்னங்களிலும் சிவப்பு நிறம் பூசப்பட்ட பேய் போன்ற வெளிறிய முகம் ஒன்று பிரதிபலித்தது. சிவப்பு நிறத்தில் ஒரு நாக்கு மட்டும் சேர்த்தால் தூக்கில் தொங்கிய பேயைப் போலவே இருக்கும். அவன் கண்ணாடியை ஓரமாக வைத்துவிட்டு தனது முகத்தை தொட்டுப்பார்த்த போது கைகள் முழுவதும் வெண்ணிறப் பொடியாக இருந்தது.

ஆன்மாவுக்கு அழிவில்லை Onde histórias criam vida. Descubra agora