உன்னை தேடி - பாகம் 4

44 6 2
                                    

தனது முகத்திற்கு முன்னே கைகள் நீட்டிய அந்த புதியவன் யார் என அவள் யோசிக்கும் முன்னே. அவனது குரல் அவளது சிந்தனையை கலைத்தது,
"பயப்படாத மா, கைய கொடுத்து சீக்கிரம் எழுந்திரிங்க "  என்று மென்மையாகவும் சற்று அழுத்தமாகவும் கூறினான்.

அதற்கு மேல் அவள் வேறு ஏதும் யோசிக்கவில்லை, அவனது குரலிலும், கனிவாக பேசிய விதத்திலும் கண்டிப்பாக இவன் அந்த அயோகர்களது கூட்டம் இல்லை என்று புரிந்து கொண்டாள். வேகமாக அவனது கையை பிடித்து எழுந்து மூச்சு வாங்க நின்றாள்.

" ஏதும் அடி பட்டு இருக்கா?? " என்று அவன் மென்மையாக கேட்டான். மருண்டு... மருண்டு... விழித்து கொண்டு இருந்தவள், தலையை இல்லையென ஆட்டி பதில் பேச வாயை திறந்தாள்.

ஆனால் அதற்குள் கண்களிள் மண் விழுந்தவன் கண்ணை சரி செய்து கொண்டு அங்கு நடந்ததை கவனித்தான். தனது கூட்டாளி கீழே அடிபட்டு எழுந்திரிக்க முடியாமல் கிடப்பதையும், யாரோ ஒரு புதியவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்பதையும் பார்த்தான். தங்கள் திட்டத்தை யாரோ

" டேய்! யார்ரா நீ?? எங்க ஊருக்கே வந்து, எங்க மேலயே கை வைக்கிற?? இரு உன்ன இப்போ என்ன பண்றேன் பாரு " என்று பேசிக்கொண்டே அவனை அடிக்க அவன் மீது பாய்ந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த புதியவன் ஸ்ரீயை ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த கொடியவனுடன் சண்டை போட ஆரம்பித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டனர். விரைவாகவே தரையில் அடிபட்டு கிடந்த அந்த இன்னொருவனும் இவர்களுடன் சண்டையில் இணைந்து கொண்டான்.

ஸ்ரீ அனைத்தையும் ஓரமாக நின்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சயம் அந்த புதியவன் அந்த காமுகர்களை விட இரண்டு மூன்று வயது மட்டுமே பெரியவனாக இருப்பான். இவன் எப்படி இவர்கள் இருவரையும் சமாளிக்க போகிறான் என்று மனதுக்குள் அஞ்சினாள்.
அவளுக்கு பயத்தில் என்ன செய்வது, ஏது செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. மூளை இயங்க மறுத்தது. ஆனால் தன்னை காப்பாற்ற வந்த,  புதியவனுக்கு ஏதும் ஆகக்கூடாது என்று மட்டும் தன் மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள்.

உன்னை தேடி Where stories live. Discover now