உன்னை தேடி - பாகம் 2

63 9 4
                                    

மாணவிகள் அனைவரும் பிரயான களைப்பு தீர குளித்துவிட்டு, உணவரிந்தி  வெளிய செல்ல தயாராகினர். அவர்கள் வந்த பேருந்திலே அனைவரும் நீலகிரியை சுற்றி பார்க்க கிளம்பினர். அவர்கள் கிளம்புவதற்கு காலை பதினோரு மணியானது.

அன்று அவர்களின் திட்டபடி ஊட்டியின் பைக்கார லேக், போடனிக்கல் கார்டன், மற்றும் ரோஸ் கார்டன் பார்க்க போவதாக திட்டம். 
ஆசிரியரின் சொல்படி மாணவிகள் இருவராக தங்கள் கை கோர்த்து கொண்டு அன்றைய தினம் முழுவதும் சுற்றி வந்தனர்.

ஸ்ரீயும் அவளது சிறு வயது தோழியும், பக்கத்து வீட்டுக்காரியுமான தனது தோழி சரண்யாவுடன் சேர்ந்து கைகோர்த்து கொண்டு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வளம் வந்தாள். சரண்யா அவளை எப்போதும் காயப்படுத்துவது போல் நடக்கமாட்டாள். அவளை வேறுபடுத்தி பார்க்காமல் சாதாரணமாக பழகினாள். அதுவே ஸ்ரீக்கு அவளை மிகவும் பிடித்து போக காரணமாகியது.

சாயங்காலம் ஆறு மணி அளவில் அனைவரும் விடுதி திரும்பினர். மாணவிகள் அனைவரும் அன்றைய சுற்றுலாவை பற்றி மகிழ்ச்சியாக பேசிவிட்டு, இரவு உணவு உண்டனர். பொழுது போகிற்காகா  இரவு நேரத்தில் கேம்ப் பைர் ( camp fire ) க்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இரவு எட்டு மணி அளவில் அனைத்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் விடுதிக்கு பின்புறம் இருந்த மைதானத்தில் ஒன்று கூடினர்.

அனைத்து மாணவிகளும் சிறு சிறு குழுக்களாக பிரிக்கபட்டு அவர்களுக்கு நடுவில் பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தபட்டது. அதில் அனைவரும் ஆறுவத்துடன் பங்கேற்றனர். கதை கூறுவது, கவிதைகள் கூறுவது, கடி ஜோக் சொல்வது, நடனம் ஆடுவது என பல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

இரவு ஒன்பதரை மணி அளவில் ஆசிரியர் அனைத்து மாணவிகளையும் உறங்க செல்லுமாறு அறிவுறுத்தினார். மறுநாள் காலை அதிகாலையில் அனைவரும் எழுந்து, நேரம் ஆக்காமல்  ஊர் சுற்றி பார்க்க  செல்ல தயாராக வேண்டும் எனக் கூறினார். அதேபோல மாணவிகளும்  தங்களது அறைக்கு சென்றனர். சிறிது நேரம் அனைவரும் பேசிய சிரித்துவிட்டு படுத்தனர்.

உன்னை தேடி Where stories live. Discover now