தென்றலே தழுவாயோ..?

Autorstwa Nuha_Zulfikar

2.3K 232 780

#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார்... Więcej

•✒•
• 1 •
• 2 •
• 3 •
• 4 •
• 5 •
• 6 •
• 7 •
• 8 •
• 9 •
• 10 •
• 11 •
• 12 •
• 13 •
• 14 •
• 15 •
• 17 •
• 18 •
• 19 •

• 16 •

80 10 56
Autorstwa Nuha_Zulfikar

               ந்தக் கள்ளமோ கபடமோ வலியோ வசையோ அறியாது தான் தூங்கிக் கிடந்த தாயின் கருவறைக்குள் இருந்து அப்போதுதான் வெளியே வந்தாற்போல இருந்தது ஆலியாவுக்கு. நடந்தது கனவா இல்லையேல் நனவா என்று அறிந்திட முடியாத இன்ப அதிர்ச்சியுடன் கடற்கரையிலிருந்து தன் தாயுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அந்நாள் வரைக்கும் ஆஸிமாவிடம் அவள் உணர்ந்திராத தாயன்பு முழுவதையும் அந்த ஒற்றை அணைப்பில் உணர்ந்தவளுக்கு அவரது கை வளைவுக்குள் இருந்த அந்தக் கணங்கள் அவ்வாறே உறைந்துவிடாதா என்னும் ஏக்கம் மட்டுமே..

வெப்பம் குறையாத அந்த மாலை நேரத்து மணல்கரையில் அலைகளின் துள்ளல் அதிகரிப்பதைப் பார்த்தவாறே இன்னும் கொஞ்சம் அமர்ந்திருந்தால் ஒருவேளை அவர்கள் இருவரும் இன்னும் நிறைய பேசியிருக்கலாம். இருட்டுவதற்கு முன்னர் கடற்கரையிலிருந்து கிளம்ப வேண்டியிருந்தது. சீக்கிரமே பரவிவிட்ட இருள்மீது வந்ததே கோபம் ஆலியாவுக்கு!

மஃரிப் நேர அதானுக்குத் தாயும் மகளுமாக முன் மண்டபத்து சோபாவில் அமர்ந்து மௌனம் காத்தனர். அவர்களுக்காகக் கதவைத் திறந்த சந்தனகுமாரியும் எதிர்பார்ப்புடன் ஆலியாவின் முகத்தை நோக்கிவிட்டு  அங்கிருந்து நகர்ந்தார். ஆலியா இருந்த களிப்பில் அதனைக் கவனிக்கவில்லை போலும்.


மின்விசிறியைத் தட்டிவிட்டு அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க, அந்த செயற்கைக் காற்றுக்குத் தன் தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்த ஆலியாவின் இரசாயனவியல் குறிப்புப் புத்தகத்தின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அதன்மீது படிந்த ஆஸிமாவின் பார்வை சிறிது நேரத்திற்கு அதன் மீதிருந்து அசையவே இல்லை.

அந்தக் குறிப்புப் புத்தகத்தைக் கையில் எடுத்த ஆஸிமா,  அதான் முடிந்ததும் ஆலியாவின் பக்கம் திரும்பினார்.

"Aaliya.. why is it here?"

அவர் அவ்வாறு கேட்கவும் கைகளைப் பிசைந்தாள் நம் கதாநாயகி.

"Sorry mamma.. நான் நாளைக்கு யுனிட் எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருந்தன். மறந்து இங்கயே-"

"-Nah.. That's not a problem at all. I know! You are studying this just because I forced you to do so.."

ஆஸிமாவின் முகத்தைப் பார்த்தவளது தலை தானாகவே அவர் சொன்னதை ஆமோதித்தது.

"Well.. You don't have to."

"W..Why?" என்றாள் ஆலியா அவர் முகத்தை ஏறிட்டவாறு.

"I'm not going to force you anymore!"

ஒரு புன்னகையுடன் ஆலியாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து மாடிப்படிகளில் ஏறிச் சென்றுவிட்டார் ஆஸிமா.

அவர் அவ்வாறு கூறியதும் இன்ப அதிர்ச்சியில் எதுவுமே செய்யத் தோன்றாது சஜ்தாவில் விழுந்தவளது கண்கள் ஆனந்தத்தில் கண்ணீர் உகுத்தன.

திடீரென்று தான் மறந்த எதுவோ ஞாபகம் வந்ததுபோல எழுந்து சமையலறைக்குள் ஓடிச் சென்றாள் ஆலியா. வழக்கமான சுறுசுறுப்பின்றி எதையோ செய்து கொண்டிருந்த சந்தனகுமாரியைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே சென்றவள் அவரே திடுக்கிடும்படி அருகில் சென்று,

"அம்மா.."

என்று அன்புடன் அழைத்தவாறு அவரை அணைத்துக் கொண்டாள்.

அரை நிமிடம் நேரமெடுத்து சுதாகரித்துக்கொண்ட சந்தனகுமாரியும் ஆலியாவை அணைத்து அவள் முதுகைத் தடவிக்கொடுத்தார். பாத்திரங்கள் கழுவியதால் நனைந்த அவரது ஆடையையும் சட்டை செய்யாமல் அவரை அணைத்துக் கொண்டவளது அன்பையெண்ணி ஒரு நிமிடம் பூரித்துப் போனார் அவர். 

"புள்ள.. அப்ப என்மேல கோவமில்லயா உங்களுக்கு?" என்று அந்நிலையிலேயே நின்றுகொண்டு கேட்டவரிடமிருந்து பிரிந்து கொண்டவள்,

"ஆ.. மறந்துட்டனே.. நான் கோவம்தான் போங்கம்மா.." என்று சுளித்துக்கொண்டாள். மற்றவரின் முகமோ வாடியது.

"என்ன அம்மா நீங்க? நான் உங்களோட கோவம் படுவேனா? அது நான் சும்மா விளையாடினது. அதுக்கா இப்டி தலைய தொங்க போட்டு இருக்கிங்க? இப்ப நல்லா  சிரிங்க பாப்பம்.. அப்பதான் அழகா இருப்பிங்க" என்றவாறு அவரது கன்னங்கள் இரண்டையும் இழுத்து சிரிக்கச் செய்தாள்.

"போங்க புள்ள.." என்று அவளது கைகளை எடுத்துவிட்டுச் சிரித்துக் கொண்டவருக்கு அதன் பிறகுதான் உணவுக்குழாய் செயற்பட்டது.

"சரி.. என்னது அவ்ளவு சந்தோஷம் இப்ப உங்களுக்கு? எங்க போனிங்க நோனாவும் நீங்களும்? முகமெல்லாம் பல்லு.."

சமையலறையின் சீலிங்கின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த மின்குமிழையும் தோற்கடிக்குமாறு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த ஆலியாவின் முகத்தைப் பார்த்து ஆச்சர்யமாக அவர் வினவ, தன் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் நடந்ததை அவரிடம் ஒப்புவித்தாள் அவள்.

"அடேயப்பா! எனக்கும் சந்தோசம்.. நான் சொன்னன்தான புள்ள? நல்ல புள்ளகளுக்கு எப்பவுமே அவங்க விரும்புறத இறைவன் ஒருநாள் குடுப்பான்" என்றவாறு அவளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார் சந்தனகுமாரி.

அதன்பின் அறைக்குச் சென்றவள் முதல் வேளையாக மாலை நேரத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு அந்தத் தொழுகை விரிப்பிலேயே அமர்ந்திருந்தாள். தன்னுடைய பலநாள் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட தன் இறைவனைத் துதித்திடத்தான் வார்த்தைகள் போதவில்லை அவளுக்கு!

இரவுத் தொழுகை நேரம் வரைக்கும் அங்கேயே அமர்ந்திருந்து தொழுதுவிட்டு எழுந்தவள் பால்கனிக் கதவைத் திறந்துகொண்டு இரைந்து கொண்டிருந்த இருண்ட கடலைக் கொஞ்சம் பார்த்து வரச் சென்றாள்.

அங்கே

மேல் வானில் வெள்ளை விளக்காய் ஒளிர்ந்த நிலவை மொய்த்த நட்சத்திரப் பூச்சிகளைப் பார்த்தவாறு அந்த இரவின் இருளில் தன்னை வந்து தழுவிய தென்றலை சுகமாக சுவாசித்தபடி நின்றிருந்தாள் ஆலியா.

ஏதாவது ஒன்று நடந்து தன் தாயின் மனம் கொஞ்சம் நெகிழாதா என்று அதே இடத்தில் நின்றவாறு தான் ஏங்கிய நாட்கள் நினைவுக்கு வந்து சென்றன. 'எதுவும் கடந்து போகும்' என்ற வாசகத்தின் மீது புது நம்பிக்கை பிறந்தது அவளுக்கு. ஆனந்தத்தில் அவள் கண்கள் விண்மீன்களை விடவும் பிரகாசமாக மின்னின.

ஞாபகங்களை இரைமீட்டியவள் கடைசியாக அன்று கடற்கரையில் வைத்து ஆஸிமா கூறிய சின்னப் பெண்ணின் நினைவு தன்னை வந்து தட்டவும் அவளைப் பற்றி யோசிக்கலானாள்.

"அட.. அந்தச் சின்னப் பெண் மூலமாகத்தான் எனக்கு  எத்தனை நல்லது நடந்துள்ளது! இறைவன் அவள் மூலமாக என் கனவுகளுக்குக் கதவைத் திறந்து விட்டிருக்கின்றான். பாவம் அவள். என்னைப் போன்றுதானே அவள் மனதும் என்னைவிடப் பல மடங்கு கஷ்டப்பட்டிருக்கும். தற்கொலை செய்யும் அளவிற்குப் போதென்றால்..!? நான் அவளுக்கு ஏதாவது செய்தாகனுமே.." என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவர்கள் வீட்டு ஸ்டோர் ரூமுக்குள் சென்றவள்  மின்குமிழை ஒளிரவிட்டுத் தன் பார்வையை அந்த அறை  முழுவதும் பரப்பினாள். பாவனை செய்யப்படாத ஒரு சாடிக்குள் இருந்த செயற்கை மலர்களை எடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்பினாள்.

அவ்வளவாகத் தூசு படிந்திருக்காத அந்த ஐந்துப் பத்து மலர்களையும் நன்றாகத் துடைத்து சுத்தப்படுத்தியவள் மும்முரமாக முயற்சித்து அவற்றை ஒரு அழகான மலர்க்கொத்தாக செய்து தன் கைபட ஒரு சின்ன, அழகான, அன்பான, நம்பிக்கையூட்டும் படியான கடிதத்தை எழுதி அந்த மலர்களுக்கிடையில் சொருகி எடுத்துக் கொண்டாள்.

அறையிலிருந்து வெளியேறியவள் நேராக ஆஸிமாவின் அறைவரை நடந்து சென்று கதவைத் தட்டினாள்.

"Come in darl!"

"மம்மா.." என்று அழைத்துக்கொண்டு நின்றவளைப் புன்னகையுடன் உள்ளே அழைத்தார் ஆஸிமா.

கட்டிலில் அமர்ந்து செல்போன் திரையை ஆராய்ந்து கொண்டிருந்தவர் இவள் வந்ததும் அதனைப் பக்கத்தில் வைத்துவிட்டு அவள் கைகளில் இருந்த மலர்க்கொத்தைக் கேள்வியுடன் நோக்கினார்.

தாயிடம் விபரம் சொன்னவள் அடுத்த நாள் வைத்தியசாலைக்குச் சென்றதும் அந்தப் பெண்ணிடம் கொடுக்குமாறு கூறி, அதனை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பிச் செல்ல எத்தனித்தாள்.

"Wait.. Take it. I guess you haven't opened it yet.." என்றவாறு அந்த ஏற்கனவே கிழிக்கப்பட்டிருந்த கடித உறையைத் தன் கட்டிலின் மீதிருந்து எடுத்தவர்,

"Congrats champion! Work hard for your dreams!" என்றவாறு அதனை அவளிடம் நீட்டினார்.

அதனை வாங்கிக் கொண்டவள்,

"Thanks ma.. you're the best mom ever!"

என்று

உணர்ச்சி மிகுதியில் ஆஸிமாவைப் பார்த்துக் கண்கள் கலங்கக் கூறிவிட்டு அங்கிருந்து அகல, அழகான ஒரு புன்னகையுடன் தலையசைத்து அவளை அனுப்பி வைத்தவர் தானும் ஏதோ ஒரு ஆனந்த உணர்வு தன்னை வந்து தழுவக் கண்கலங்கினார்.

ஒரே நாளில்.. இல்லையில்லை ஒரு நாளைக்குள்ளே அவரில் ஏற்பட்ட  மாற்றங்கள்தான் எத்தகையவை!

அதுவரை அந்தக் கடிதத்தைப் பற்றி மறந்தே போயிருந்த ஆலியா அப்படி அதற்குள் என்னதான் இருக்கின்றதோ  தெரியவில்லை என்று ஆர்வம் பொங்கலாய்ப் பொங்க, அறைக்குள் சென்று தன் கட்டிலில் அமர்ந்து அந்த உறையினுள் இருந்த தாளை எடுக்க முனைந்தாள்.

"புள்ள.. சாப்பிட வாங்க. நேரம் கழியுது.." என்றவாறு இவளைத் தேடி வந்த சந்தனகுமாரி அழைக்க, அதனை மறுக்க முடியாமல் கையில் இருந்ததை மேசையில் வைத்துவிட்டு எழுந்து கீழே சென்றாள்.

அன்று இரவு உணவின்போது ஆஸிமாவும் அங்கே வந்து அவளருகில் அமர்ந்து கொண்டார். சந்தனகுமாரி, மண்டபத்தில் டீவிக்கு முன்பு அமர்ந்திருந்த செல்வங்களின் வாய்க்குள் பழத்துண்டுகளை ஒவ்வொன்றாகத் திணித்துக் கொண்டிருக்க, இங்கே ஆஸிமா பப்பாசியின் தோளை சீவியவாறு ஆலியாவுடன் சுவாரசியமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் தன் தாயைப் பார்த்து எதற்காகவெல்லாம் ஏங்கினாளோ, அவையெல்லாம் ஒட்டு மொத்தமாகக் காலடியில் வந்து குவிந்தாற்போல ஆலியாவின் மனது குளிர்ந்து. அன்றைய இரவுணவின்போது அவள் வயிறும் மனதும் சேர்ந்தே நிறைந்தன. ஆஸிமாவினதும்தான்.

அடியார்களின் இறைஞ்சுதல்களை செவியேற்கும் இறைவனின் அருளால் இனி ஒவ்வொன்றாக எல்லாமே நல்லதாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இரவுணவை முடித்துக்கொண்டு அறைக்குள் வந்தாள் ஆலியா. அவளிடம் ஏதோ ஒன்றைக் கொடுக்க மறந்துவிட்ட ஆஸிமாவும் ஆலியாவுக்குப் பின்னால் அவளது அறைக்குள் நுழைந்தார்.

பின்னால் வந்த தாயைக் கவனிக்காமல் கட்டிலுக்குக் கீழே புத்தகங்களைப் போட்டுத் தான் ஒளித்து வைத்திருந்த பெட்டியை இழுத்து அதனை நோட்டம் விட்டவள் இனிமேல் அவற்றை ஒளிக்கத் தேவையில்லை என்று எண்ணியவாறு ஓரிரண்டு புத்தகங்களை எடுத்து மேசையில் போட்டுவிட்டுத் திரும்ப எத்தனித்தாள்.

"Aaliya!"

பழைய ஆஸிமாவின் ஈரம் துடைக்கப்பட்ட குரல் தன் பின்னாலிருந்து ஒலிக்கவே, திடுக்கிட்டவள் ஸ்லோ மோஷனில் திரும்பிப் பின்னால் பார்த்தாள். வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.

"Ma.. mamm.. mam.. ma.." என்று திணறியவளை ஒரு பார்வை பார்த்தவர் திடீரெனத் தன் கடுமையான முகபாவத்தை மாற்றிக்கொண்டு சத்தமாகச் சிரித்தார்.

"You.. naughty!" என்றவாறு அவளது கன்னத்தைக் கிள்ளியவர் அவள் கைகளில் தான் மாதங்களுக்கு முன்பு அவளிடமிருந்து பிடுங்கிய செல்போனை வைத்துவிட்டு அதே சிரிப்புடன் அங்கிருந்து சென்றார்.

பின்னால் தாய் வருவதைக் கவனிக்காமல் அவசரக் குடுக்கையாய் செயற்பட்டதை எண்ணித் தன் நாக்கைக் கடித்துக்கொண்ட ஆலியா மீண்டும் அந்தக் கடித உறையை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

உறையின் இடது பக்கத்தில் தடித்த கறுப்பு எழுத்துக்களில் எழுதியிருந்த ஒன்று கண்களைக் கவர்ந்தது.

• தென்றல் தழுவும் •

Czytaj Dalej

To Też Polubisz

625 53 9
#குறுநாவல் நினைத்தது எல்லாமே எப்பொழுதும் நடந்துவிடுவதில்லை. ஆனாலும் சில நேரங்களில் நடந்துவிடுகின்றது, நினைக்காத வகைகளில்!
659 47 16
குடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்த...
854 45 42
🌸ஓம் நமசிவாய நம்பெருமாள் கேட்க எம்பெருமான் திருவாய் மொழிந்த மகத்துவம் வாய்ந்த சிவகீதை இன்று முதல் தொடர் பதிவாய் வெளிவரும்... எனை ஓர் கருவியாய்க் கொண...
84 8 5
இமயம் தொட்டுப் பொங்கும் மானசரோவர் போல், இதயம் தொட்டுப் பொங்கும் சிவ காதலின் வரிகள் இவை❣