1

35.4K 468 60
                                    

டேய் மச்சி போதும் உன் உழைப்ப ஓரங்கட்டிட்டு வரியா சாப்ட போலாம் - வருண்

என்ன கிண்டலா- சக்தி என்கிற சக்திவேல் நம்ம கதையயோட ஹீரோ கொஞ்சம் உம்மனா மூஞ்சி

பின்ன என்ன டா லன்ச் ப்ரேக் ல வொர்க் பன்னிட்டு இருக்க என கிண்டலடித்தான்

சரி சரி ரொம்ப பேசாத வா என்று வருணின் தோளில் கை போட்டபடி சக்தி அவனை கேன்டினிற்கு இழுத்து சென்றான்
தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு ஒரு டேபுளில் அமர்ந்தனர்.
இருவரும் உணவு அருந்திவிட்டு தங்கள் கேபினிற்கு செல்ல ஆயுத்தமாக...

சக்தி.,. என்ற பெண் குரல் கேட்டு இருவரும் திரும்பினர்

நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...

ப்ச்... என்ன...

தனியா பேசனும்...

ம்ம்ம்... இருடா வரேன் என்றபடி சக்தி அவளுடன் சென்றான்
இருவரும் பத்தடி தள்ளி நின்றிருக்க
ஒரு சில நிமிடங்கள் அவளுடன் பேசியவன் இறுகிய முகத்துடன் வருணின் அருகில் வந்தான்.

வா போலாம்.,.. என்றபடி வருணை அங்கிருந்து இழுத்து சென்றான்.
கேபினில..... வருண் சக்தியை முறைத்தபடி நின்றிருதான்.
ஆனால் அவனோ எதையும் கண்டுக்கொள்ளாமல் தன் வேலையை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
நான் இங்க இப்டி நிக்கிறேன் என்னனு கேக்றானா பாரு.

சக்தி....

பதிலில்லை.

சக்தி....

என்னடா,...குரலில் எரிச்சல் கலந்திருந்தது.

இன்னும் எத்தன நாளைக்கு இப்படி இருக்க போற.,

எப்படி.,,

தனிமரமா,,..

தனிமரமாவா,.. அதான் நீ இருக்கியே அப்றம் என்ன...

ப்ச்..,. உனக்குனு ஒரு வாழ்க்கை துணை வேண்டாவாடா. அந்த ரேஷ்மா தான் உன் பின்னாடியே 2 வருமா சுத்துரா அவள ஏத்துக்கிட்டா என்ன.,.

ப்ச்... எனக்கு யாரும் வேண்டாம் டா நா இதுவரைக்கும் இழந்தது போதும். இனி இத பத்தி என்கிட்ட பேசாத.,.

சரிடா நான் எதையும் இனி பேசல.,
என்ற வருண் கோவமாக தன் கேபினிற்கு சென்றான்.

ரேஷ்மா பத்தி சொல்லனும்னா சரியான திமிரு புடிச்சவ யாருக்குமே அவள புடிக்காது சக்திக்கும் தான்... அப்றம் ஏன் வருண் அவள ஏத்துக்க சொன்னானு கேக்றிங்லா ... எப்டியாச்சும் அவன் வாழ்க்கைல ஒரு நல்லது நடந்துறாதானுதான்.

இதய திருடா जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें