ஹாசினி

By prenica

62.2K 2.7K 649

5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூ... More

நீர் வீழ்ச்சி
மோதிரம்
வாழ்த்துக்கள்
திரைப்படம்
மாஷா அல்லா
புதிர்
மரண விறைப்பு
புகைப்படம்
அந்த கண்கள்
Authors note
காட்டு வழி
கரடி பொம்மை
உன்மை
கழுத்து சங்கிலி
முத்தம்
இருள் காடு
ஹாசினி
தீ
ஹாசினி -1
ஹாசினி

விடுமுறை

8.2K 196 55
By prenica

All rights reserved:

Any unauthorized use or reprint of this material is prohibited

This is a work of fiction any resemblance of name, place or incidence are purely coincidental.----------------
---------------------------------------------

ஒரு ஊரில் 5 நண்பர்கள் இருந்தனர்... கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து முடித்தார்கள்...
"ஏய் சிவா கல்லூரி முடிந்து விடுமுறை காலம் தொடங்க போகிறது. நீ விடுமுறை காலங்களில் என்ன செய்ய போகிறாய்???"

"எனக்கு தெரியவில்லை மாலதி .வா எல்லாரையும் விசாரிக்கலாம்"

"சரி வா போகலாம்".

அவர்கள் இருவரும் நண்பர்களை தேடி சென்றனர்....

"அதோ அங்கு உள்ளனர்.
பூஜா,ஹாருஷ், இங்க வாங்க"...என மாலதி அழைத்தார்.

"என்ன விஷயம் மாலதி"???

"ஹாரூஷ்  நமக்கு லீவ் விட்டுடாங்க. இப்போ என்ன பண்ணலாம்???"

"வீட்டிற்க்கு போகலாம்"....என ஹாரூஷ் கூற

"அது எப்போதும் பண்றது...புதுசா ஏதாவது பண்ணலாம்"....என மாலதி கூறினால்

"ஆமாம் ஹாரூஷ்  ஏதாவது பண்ணலாம்".

"புரியுது பூஜா,ஆனா எண்ண பண்ணலாம்???

"நான் உன்னை கேட்டேன்"...என்று பூஜா கூற

"ஐடியா".

"என்ன என்ன??? சொல்லு ஹாரூஷ்" என்று அனைவரும் கேட்டார்கள்.

"ஹம்சினி எங்க??? என்று ஹாரூஷ் கேட்டான்

"ஆமாம் அவ எங்க???....என்று மாலதியும் ஏக்கத்துடன்் கேட்டாள்

"அதோ அங்க வரா பாரு மாலதி"...என்று சிவா அவள் வரும் திசையில் கை நீட்டினான்.

"ஹம்சி சிக்கிரமாக வா" என மாலதி அழைத்தால்

"என்ன விஷயம்??? எல்லாரும் பரபரப்பா இருக்கிங்க"... என ஹம்சி உற்சாகத்துடன் கேட்டால்.

"ஹம்சி லீவ் விட்டாச்சி!!! என்ன பண்ணலாம் ??? என்று சிவா கேட்டான்.

"தினமும் ஊர் சுற்றி பார்க்கலாம்"....சிவா

"ஹம்சி அது போர் அடிக்கும்"....என பூஜா கூறினால்

"சரி பூஜா நீயே சொல்லு"....

"ஏய் நம்ம எல்லாரும் சேர்ந்து tour போகலாம்"...என ஹாரூஷ் கூறினான்

"குட் ஐடியா ஹாரூஷ் . ஆனா செலவாகும் பரவாயில்லையா???"

"மாலதி செலவ பற்றி கவலை படாதே. இது ஒரு நல்ல ஞாபகத்தைக் கொடுக்கும்".

"அட உனக்கு பரவாயில்லைபா.நான் போய் என் அப்பா கிட்ட கேட்டா ஏழு கழுத வயசாகுது இன்னும் அப்பன் காசுல சாப்பிடுறியே உனக்கு வெட்கமாக இல்லையான்னு கேட்பாரு"...என சிவா பதில் கூறினான்

"சிவா நல்லது நடக்கும் போது, கொஞ்சம் திட்டு வாங்கினா தப்பு இல்ல"...என பூஜா கூற

"திட்டும் வாங்க வேண்டாம், பணமும் செலவாகாது"...என ஹம்சி பதில் தந்தாள்

"எப்படி???....என எல்லாரும் ஆச்சிரியமாக கேட்டனர்.

"எனக்கு ஒரு farm house இருக்கு. நம்ம லீவ் அங்க கொண்டாடலாம்"...என ஹம்சி கூறினால்

"ஏய் எங்க இருக்கு???என சிவா கேட்டான்

"அது "பாண்டிச்சேரியில்" உள்ளது...

"வாவ்!!!கண்டிப்பாக நாம் அங்கு போகலாம்"...என மாலதி கூறினால்

"இப்பொழுதே புறப்படலாம்"...

"ஆம் ஹம்சினி கூறுவது சரி...இல்லை என்றால் நாம் நல்லிரவு தான் அங்கு சென்றடைவோம்"...என்று ஹாரூஷ், கூறினான்

அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று. அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வந்தனர்...
ஹாரூஷ் ஜீப் கொண்டு வந்தான்...

எல்லோரும் அவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்...

"ஏய் சிவா வீட்ல என்ன சொல்லிட்டு வந்த???என ஹாரூஷ் கேட்க.

"வீட்ட விட்டு கிளம்புறேன்னு சொன்னேன். மொத்த குடும்பமும் வந்து வழி அனுப்பி திரும்ப வந்துடாதப்பான்னு பாசமா சொல்லி அனுப்பினார்கள்"...என்று சிவா கூறினான்.

அவன் சீரியசா சொல்லி முடித்ததும். அனைவரும் அவனை கண்டு சிரித்தனர்....

"ஹாரூஷ் நீ களைப்பா இருப்ப. நான் drive பண்ணட்டா???என ஹம்சி பாசமாக கேட்டால்

"வேண்டாம் ஹம்சினி. நான் களைப்பா இல்ல"

"ஹாரூஷ் டய்ம் 8:30. பயங்கரமா பசிக்குதுடா வண்டிய ஓரம் கட்டு எதாவது சாப்பிடலாம்"...என்று சிவா கூறினான்

"டேய் சுத்தி பாருடா. வழி எல்லாம் மரம் மட்டும்தான் இருக்கு. இங்க என்ன சாப்பிடுவ???என மாலதி கேட்டாள்.

"சரி சீக்கிரம் போடா, எதாவது கடை வரும்".

"சரி மச்சி". என்று ஹாரூஷ் கூற

"ஏய் ஹம்சி. இங்க எந்த கடையும் இருக்காதா???என்று மீண்டும் சிவா கேட்டான்

"கொஞ்சம் பொறுத்துக்கொள்... இன்னும் 10 நிமிடத்தில் நம் வீடு வந்துவிடும்"...என்று ஹம்சி பதில் அளித்தால்

அவள் கூறியது போல் 10 நிமிடத்தில் அனைவரும் வீடு சென்றடைந்தனர்...சிவா வேகமாக வண்டியை விட்டு இறங்கினான்.

"ஹம்சிசிசிசி..... இது வீடா இல்ல பூத் பங்களாவா???"

"ஏய் சிவா கிண்டல் பண்ணாத... இந்த வீட்டுக்கு நான் வந்து 15 வருடம் ஆகுது".

"சரி வா இப்போ போகலாம்...என்று சிவா அழைத்தான்".

சிவா முதலில் சென்று கதவை திறந்தான்.... பூட்டி வைத்து இருந்த வீட்டில் இருந்து வேகமாக வெளவால்கள் பறந்து சென்றது...அவன் பயந்து இரண்டு அடி பின்னால் நடந்தான்...

"உண்மையாகவே!!! இது "பேய்" வீடு போல...என மாலதி கூற

"ஏய் மாலதி. அமைதியா இரு ஹம்சினி காதில் விழ போகிறது"...என்று பூஜா அவளை தடுத்தாள்

"ஏய் எல்லாரும் வாசல்ல நின்று கொண்டு என்ன செய்கிறீர்கள்"...என ஹம்சி கேட்டால்

"ஆர்த்தி எடுக்க யாராவது வருவார்களா என்று காத்து கொண்டு இருக்கிறோம்"...என்று உள்ளே எட்டி பார்த்துக்கொண்டே சிவா கூறினான்

"இப்போதுதான் வெளவால்கள் ஆர்த்தி எடுத்துவிட்டு சென்றது. இது போதவில்லை என்றால் நான் வேண்டுமானால் சன்னி லியோனை வர சொல்லவா???என ஹாரூஷ் கூறினான்

"ஆஆஆஆஆஆஆ சன்னினினினி".

"டேய் சிவா உள்ள வாடா அப்பறம் சன்னிய எண்ணி வாசல்ல தூங்கப்போற"...என ஹாரூஷ் சிரித்துகொண்டே கூறினான்

அனைவரும் உள்ளே சென்றனர்...

"ஹம்சினி".

"என்ன ஹாரூஷ்???

"வீட்டுக்குள்ள யாரும் இல்லையா???

"இல்ல நம்ம 5பேர் மட்டும்தான்".

"எனக்கு பசிக்குது சாப்பாடு எங்க??? என்று சிவா கேட்டான்

"சிவா...கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள் சாப்பாடு வந்திடும்".

"சரி ஹம்சி".

ஹம்சினி அவ பொருள் எல்லாம் பக்கத்தில் வைத்துவிட்டு வீட்டை சுற்றி பார்த்தாள்...
மாலதி அதை கவனித்தாள்.

"ஏய் ஹாரூஷ்... ஹம்சி ஆர்வமா அவ வீட்ட சுற்றி பார்க்கிறாள். வாங்க நாம் போய் மறைந்து அவளை ஏமாற்றலாம்"

"உம் ஓகே"

அவர்கள் அனைவரும் இடது புறம் சென்று மறைந்தனர்...

ஹம்சினி திரும்பி பார்த்தபோது அங்கு யாரும் இல்லை...

"ஏய் எல்லாரும் எங்க இருக்கிங்க???
ஹாரூஷ் , மாலதி...
விளையாடாதிங்க வெளியே வாங்க"...

"வாங்க போகலாம்", அவ பயந்திட போரா".

"ஏய் ஹாரூஷ் . உன் அன்பு பாசம் எல்லாம் இங்கு வேண்டாம்...கொஞ்சம் பொறு அவ என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்" என்று பூஜா கூறினாள்.

ஹம்சி இடது புறமாக திரும்பி நடக்க அவள் பின்னால் யாரோ ஓடுவது போல் தெரிந்த உடன் அவள் சட்டென்று திரும்பி பார்த்தாள்...அவர்கள் அங்கு உள்ளனர் என்று எண்ணி அவள் வலது புறம் திரும்பி நடந்தாள்...

"ஏய்!!!அவ என்ன அந்த பக்கம் திரும்பிட்டா... வா நாமும் செல்வோம்"...என ஹாரூஷ் அவர்களை அழைத்தான்

ஹம்சினி யாரோ ஓடுவதாக எண்ணி பின் தொடர்ந்து மேலே ஓடினால்...அவள் நண்பர்களும் அவள் பின்னால் சென்றனர்... ஹம்சினி மேலே உள்ள முதல் அறைக்குள் சென்றாள்...

"இங்குதான் இருக்கிறீர்கள் மறைந்து விளையாடியது போதும் வெளியே வாங்க"...

அவள் அந்த அறை முழுவதும் தேட தொடங்கினாள்
சட்டென்று கதவு தானாக மூடியது... அவள் பயந்து திரும்பி பார்த்தாள் அவள் இதய துடிப்பு அதிகரித்தது அவள் கைகளை நெஞ்சில் வைத்து அவளை அமைதிப்படுத்த முயற்சித்தாள்...
அப்பொழுது அவள் வலது தோள் மேல் யாரோ கை வைத்ததும் ",அவள் உயிர் துடிப்பு நின்று மீண்டும் துடிக்க" அவள் வலது புறம் தலையை மெல்ல திரும்பி... ஓரக்கண்ணால் அந்த கையை பார்த்தாள் சட்டென்று கதவு திறந்தது...அவள் பயத்தில் துள்ளினாள்...

"ஹம்சி பயந்திட்ட போல"...என சிவா கேட்டான்

அவள் நான்கு நண்பர்களும் அந்த அறையின் வாசலில் நின்று அவளை கண்டு சிரிக்க... அவள் மான் விழி பயத்தை வெளிபடுத்த... அவள் மெல்ல திரும்பி பார்த்தாள்... அங்கு யாரும் இல்ல... அவள் அடுத்த வினாடி மயங்கி விழுந்தாள்...
****************************

Hi friends this is my 5th story,but first story in Tamil. After 5 year I'm writing in Tamil. I'm happy to publish in Tamil. If any mistake forgive me. I'm sure this story will be interesting. Give me your comments for my story. If you need to give any comments Regarding my Tamil please tell me secretly 😛 love you I will see you soon with my updates...

Continue Reading

You'll Also Like

10.7K 548 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???
3.2K 690 40
ஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!
107K 3.3K 40
Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???
2.7K 478 10
appadi ethuvum perusa illa.. solra alavuku puthusavum illa.. ஆனா.. முல்லை கதிரை பற்றி ஏதோ எழுதவும் ஏதோ சொல்லவும் aasai ♥️