தேடல் 8

216 22 47
                                    

இந்த பதிவில் பேய் பிடிப்பது என்கிறார்களே.. அதை பற்றி காண்போம்.

நாம் இதுவரை தெரிந்து கொண்டது: இறந்தவருடைய ஆவி ஒரு மின்காந்த ஆற்றலால் ஆனது, அதற்கு உணர்ச்சிகள் உண்டு ஆனால் உணர்வு கிடையாது. இறப்பதற்கு முன்பு இருந்த குணநலன்களே இறந்த பின்பும் இருக்கும். ஆவிகளால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் ஆனால் பேய்களால் இயலாது. பெரும்பாலான ஆன்மாக்களுக்கு தாங்கள் இறந்ததே தெரியாது. சில ஆன்மாக்களுக்கு தான் தாங்கள் யார் என்று நினைவு இருக்கும். ஆன்மாக்களால் நேரடியாக மனிதர்களின் உயிருக்கு தீங்கு செய்ய இயலாது.

புத்திசாலியான ஆன்மாக்களால் தான் மனிதர்களை ஆட்டி படைக்க முடியும். அவற்றால் மனிதர்களின் உணர்ச்சிகளைஅறிந்து கொள்ள முடியும். பேய் பிடித்து( possession) கொண்டது என்பது ஒருவருடைய உடலில் ஆவி  புகுந்து கொள்வது அல்ல.

நம் உடலில் ஆற்றல் புலம் உள்ளது. ( Energy field) , இந்த ஆற்றல் புலத்துடன் ஆன்மாக்கள் தங்களை இணைத்து கொள்ளும் (attachment). இதை தான் பேய் பிடித்து விட்டது என்று கூறுகிறோம் ( ghost attachment).  இது ஒருவருடைய ஆற்றலை உறிஞ்சவோ இல்லை என்றால் ஒருவரை ஆட்டி வைக்கவோ நடக்கலாம். வேறு எதனால் இது நடைபெறுகிறது?

° ஆன்மாக்கள் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கூட ஒருவருடைய ஆற்றலை உறிஞ்ச கூடும்

Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.

° ஆன்மாக்கள் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கூட ஒருவருடைய ஆற்றலை உறிஞ்ச கூடும். அதற்கு தேவையான ஆற்றலை மனிதர்களிடம் இருந்து எடுத்து கொள்ள கூடும்.

° இயற்கையிலிருந்து ஆற்றலை பெறுவதைவிட மனிதர்களிடம் இருந்து ஆற்றலை பெறுவது சுலபம். 

° சில தீய ஆன்மாக்கள் தான் உயிருடன் இருந்த போது அனுபவித்த சுகங்களை திரும்பவும் அனுபவிக்க ஒருவரை ஆட்கொள்ள கூடும்.

°  இறுதியாக ஒருவரை பழிவாங்கவோ அல்லது வேண்டுமென்றே பிறருக்கு துன்பம் விளைவிக்கவோ  தீய ஆன்மாக்கள் மனிதர்களைஅனுக கூடும். 

சில ஆன்மாக்கள் வேறுவழியின்றி ஒருவருடைய ஆற்றலை உறிஞ்சும், இன்னும் சில ஆன்மாக்கள் ஒருவரை காக்க நல்வழிபடுத்த அவருடன் தன்னை இணைத்துக்கொள்ளும்.  தன் காரியத்தை ஒருவர் மூலம் நிறைவேற்ற துடிக்கும் ஆன்மா ஒருவருடன் தன்னை இணைத்து கொள்ள கவனத்துடன் செயல்படும்.

யார் அதிக எதிர்மறை எண்ணங்களை கொண்டுள்ளனறோ; கோபம், வெறுப்பு , காழ்புணர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளை கொண்டுள்ளனரோ அவர்களை ஆன்மா ஆட்கொள்வது மிகவும் சுலபம்.

ஒரு கோட்டை தாக்குதலுக்கு உட்படும்போது அதன் எதிரி  அதன் பலம் , பலவீனங்களை ஆராய்வது போல ஆன்மாவும் ஒருவருடைய பலவீனங்களை எதிர்நோக்கும். உங்களுடைய கோட்டையை மெதுவாக ஆட்டம் காண வைக்கும். உங்கள் மன திடத்தை உடைத்தெறியும்.

தூக்கமின்மை, தூங்கும் போது கெட்ட கனவு , அதீத கோபம், பயம் போன்றவற்றை விளைவிக்கும். உங்களுடைய மனதிடம் குறைய குறைய ஆன்மா உங்களை நெருங்கும் . உங்களுடைய திடம் குறைய தொடங்கிய உடன் உங்கள் எண்ணங்களை அது ஆட்கொள்ளும். உங்கள் சிந்தனைகள் மாறக்கூடும். முன்பு கூறியது போல நீங்கள் கோட்டை என்றால் ஆன்மாவானது உங்கள் எதிரி.

முதலில் கோட்டையின் பலத்தை தகர்த்து பின் கோட்டைகுள் நுழையும்

Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.

முதலில் கோட்டையின் பலத்தை தகர்த்து பின் கோட்டைகுள் நுழையும். இப்படி உங்களை கைப்பற்றியப்பின் தன் எண்ணங்களுக்கு ஏற்ப உங்களை ஆட்டி வைக்கும். தன்னுடைய முழு ஆளுமையை உங்கள் மீது செலுத்தும்.

இப்படி பேய் பிடித்தவர்களை எப்படி கண்டறியலாம்.. அடுத்த பதிவில் காண்போம்.

மாய உலகை தேடிOpowieści tętniące życiem. Odkryj je teraz