அன்புடை நெஞ்சம் கலந்தனவே

נכתב על ידי LakshmiSrininvasan

141K 8.6K 1.2K

எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அ... עוד

முதலில் கொஞ்சம்...
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45

அத்தியாயம் 36

3.2K 202 34
נכתב על ידי LakshmiSrininvasan

வீட்டில் பால்கனியில் நின்றிருந்த பூரணியிடம் வந்தார்கள் மகன்கள் இருவரும்.

"அம்மா, நம்ம கிளம்புவதற்கு முன்னாடி நம்ம மஹாவுக்கும் மாமாவுக்கும் சுத்தி வச்சிடுறீயா?" என்றான் வருண்.

"ஏன்டா? என்ன திடீர்னு?" என்றாள் அம்மா சிரித்து கொண்டே.

"மாமா ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்கம்மா. எங்களை கூட்டிட்டு வரும் போது மாமாகிட்ட நம்ம மஹாவை கொஞ்சம் ஒரண்டு இழுகிற மாதிரி பேசினேன்.அவரு எவ்வளவு நாசுக்கா மஹாவை விட்டுகொடுக்காமே பேசினாரு தெரியுமா?..ம்ச் சூப்பர்மா.." என்று சிலாகிப்பாய் நின்றான்.

"நினைச்சேன், உங்க ரெண்டு பேருக்கும் வாயே அடங்காதா? சங்கடபட்டிருக்க போறாருடா.ம்ச்.. எதையாவது பேசி வைக்க வேண்டியது..கடவுளே." என்று சலித்து கொண்டாள் அன்னை.

"இல்லம்மா, அப்பிடி ஒன்னும் அவன் தப்பா எல்லாம் பேசலை, சும்மா தான் சொன்னான். மாமா கூட ஜாலியா தான் எடுத்துகிட்டாங்க." என்றான் பெரியவன் விஷ்ணு.

"ம்ஹூம்..பார்த்து பேசுங்கடா..நானும் தான் பாக்கிறேனே..மாப்ள கையுகுள்ள வச்சு தான் தாங்குறாரு நம்ம மஹாவை." என்று சிரித்தாள்.

"என்னை பத்தி என்ன பேச்சு?" என்றபடி வந்தாள் மஹா வீட்டிற்குள். பின்னாடியே வந்தான் விக்ரம்.

"அதுகுள்ள வாக்கிங் முடிச்சிட்டீயா?" என்றாள் அன்னை.

"கொஞ்சம் டயர்டா இருந்துச்சு அத்தே அதான் வந்திட்டோம்." என்றான் விக்ரம்.

"நீங்க படுக்க போங்க மாப்ள. நாளையில் இருந்து நீ எங்க கூட வாக்கிங் வா.. அவரே அசந்து போய் வராராரு அவரை போட்டு நச்சிக்கிட்டே இருக்கே" என்றவள் மகளை பார்த்தாள்.

"உன்னை எல்லாம் வர சொல்லிருக்கவே கூடாது..எப்பிடிடா இவங்களை மேற்கிறீங்க.ரொம்ப சந்தோஷம் போ.." என்றவள் கண்ணில் கண்ணீர் கூடியிருந்தது. நடந்து போய் கிட்சனில் தண்ணீரை குடித்து விட்டு ரூமிற்குள் சென்றாள் மஹா.

"அவ அப்பிடி தான் நீங்க போங்க மாப்ள, நான் பார்த்துகிறேன்" என்று அவள் நகர போகையில்.

"அவ தான் டயர்ட் ஆகிட்டா அத்தே, அதான் கூட்டிட்டு வந்தேன்.." என்றவன் "நான் பேசிக்கிறேன் அத்தே" என்றபடி.ரூமிற்குள் நுழைந்தான்.

"ம்..நீ எங்களை சொல்லுறே? சரி நீ வா நம்ம எதிர் வீட்ல கொஞ்ச நேரம் இருக்கலாம் வா" என்றபடி வருண் தாயை அழைத்து கொண்டு எதிர் வீட்டிற்கு சென்றான்.விஷ்ணுவும் அவர்கள் பின்னாலே சென்றான்.

ஜன்னலை பிடித்து கொண்டு நின்று இருந்தவளை பின்னால் இருந்து கட்டிக் கொண்டு "என் அழகீ..அவங்க உன் அம்மா தானே..இட்ஸ் ஓகே விடுறா." என்றான்.

"என்ன உன் மாமியாருக்கு சப்போர்ட்டா..ம்ச்..போ" என்றாள் சுரத்தையில்லாமல்.

"சரி அவங்களுக்காக நான் சாரி கேட்கிறேன்" என்றான் அவள் கன்னத்தில் தன் கன்னத்தை தேய்த்தான்.

"இந்த சாரி எல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம், நீ கிளம்பு உங்க மாமியார் இதுக்கு வேற என் தலையை தான் உருட்டும்..ம்ச்..நீ போ" என்று முறைத்தாள் அவனை திரும்பி பார்க்காமல்.

"சரி நம்ம சாரி சொல்லுறேன், அப்ப ஓகேவா" என்றான் விடாமல்.

"நிஜமாவா.." என்றபடி மெதுவாய் அவன்புறம் திரும்பினாள்.

"ம்.."என்றவன் அவள் முகத்தை கையிலெடுத்து அவன் கண்களை பார்த்து "கண்ணுக்குள்ள இருக்க கண்ணீர் வெளியே வராமல் அப்பிடியே உள்ளே போனா தேங்க்ஸ் கூட சொல்லுவேன்" என்று மெலிதாக சிரித்தான்.

"சும்மா போங்கு தானே" என்றாள் அடிக்கண்ணில் அவனை பார்த்தபடி.

அவள் நெற்றியில் முத்தமிட்டு "இல்ல" என்றான்.

"தங்கம்டா நீ.."என்றபடி மூக்கை நன்றாக உறிஞ்சி கொண்டு "இப்ப பாரு..கண்ணுல கண்ணீர் இல்லையில்ல" என்றாள் குழந்தை மாதிரி.

"ம்" என்று மெலிதாக சிரித்தவன் அவள் கன்னத்திலும் இதழிலும் மாறி மாறி முத்தமிட்டான்.

சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து சிரித்து கொண்டே நகர்ந்தவள். "இது என்னை தாஜா பண்ண மட்டும் தான்..ஓகே வா" என்று குழந்தைதனமாய் ஒற்றை விரலை நீட்டி.

"சரி..உங்கம்மா வந்தா மறுபடியும் சண்டை போடாதே. சரியா" என்றபடி அவள் முகத்தை கையில் எடுத்தான்.

"ம்..சரி" என்றவள் "ம்ஹூம்..என் வாழ்க்கையிலே நீ மட்டும் முன்னாடியே வந்திருந்தா..நான் வாழ்ந்து முடிச்சு செத்தே போயிருப்பேன்டா" என்றாள்.

"ம்..அதான் நீ லேட்டா வந்திருக்கே..உனக்கு வேற வழியில்லை நாம இந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் தீர்க்கணும்." என்றபடி அவள் முன்நெற்றியில் தன் நெற்றியால் முட்டினான்.

யாரோ முன் கதவை தட்டும் ஓசை கேட்கவும். "யாரோ கரடி" என்றாள் அவள்.

அவளிடம் இருந்து விலகி வெளியே போனவனை காலரோடு பிடித்து "நாளன்னிக்கு, இவங்க போறாங்க, அப்பா அம்மா எப்போ வர்றாங்க?" என்றாள்.

"அவங்க அடுத்த நாள் தான் வர்றாங்க, ஏன்?" என்றான் புரியாமல்.

"ஐ..அப்ப நமக்கு ஒரு நாள் கேப் இருக்கும் இல்ல" என்று சிரித்தாள்.

"உன்ன..சரி உங்கம்மாவுக்கு தூக்கம் வந்திருச்சோ என்னவோ..சரி நீ படுத்துக்கோ..நானும் படுக்க போகிறேன்." என்றவன் திரும்பி வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு "குட்நைட்" என்று விட்டு சென்றான்.

அடுத்து வந்த நாட்களில் மஹாவின் பெற்றோரும் தம்பிகளும் பெரும் சந்தோஷத்துடனும் பூரிப்புடனும் கிளம்பினார்கள்.

ஏர்போர்ட்டிற்கு வரவும் எல்லோரும் லக்கேஜ்களை எடுத்து சற்று தள்ளி வைத்து விட்டு நின்றார்கள். லிங்கம் கடைசியாக விக்ரமிடம் "மாப்ள, மனசு நிறைவோட போகிறேன்..ம்ஹூம்..ரொம்ப சந்தோஷம்..நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்பிடியே இருக்கணும்." என்றவருக்கு வார்த்தை தடுமாறியது.

"மாமா..உங்க ஆசீர்வாதம் இருக்கும் போது எங்களுக்கு எந்த கஷ்டமும் வராது.எல்லோரும் பத்திரமா போயிட்டு வாங்க. எங்களுக்காக வந்ததுக்கு தேங்க்ஸ் மாமா." என்றான்.

"அய்ய என்ன மாப்ள நீங்க..சரிங்க மாப்ள நாங்க கிளம்புகிறோம்." என்றபடி எல்லோரும் கிளம்பி சென்றனர்.

விக்ரம் வீடு வந்து காலிங்பெல்லை அடிக்கவும். மஹா கதவை திறந்து "யாய்..எங்கம்மா ஊருக்கு போயிருச்சு..தங்கமணீ என்ஜாய்" என்றபடி மெலிதாய் ஆடிக் கொண்டே கத்தினாள்.

விக்ரம் சிரித்தபடி உள்ளே வந்து ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு மறுகையை இடுப்பில் வைத்து கொண்டு நின்றிருந்தான்.

"என்ன அப்பிடி பார்க்குறே..எனக்கு அப்பிடியே குத்தாட்டம் போடணும் போல இருக்கு தெரியுமா" என்றபடி அவனை இழுத்தாள்.

"இதெல்லாம் என்ன அழகீ,அவங்க நமக்கு ஹெல்ப் பண்ண தானே வந்தாங்க.ம்ச்.. இங்க வா உட்காரு.." என்று அவளை பிடித்து சோபாவில் உட்கார வைத்து தானும் அடுத்ததாய் அமர்ந்தான்.

"அப்பா..என்ன சமாளிபிகேஷன்.." என்றபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"உன் கூட இருக்கிறது ஒரு சந்தோஷம்..அந்த மாதிரி அவங்க இருந்தப்போ இந்த வீடு நல்லா கலகலன்னு இருந்துச்சு இல்ல.." என்றான்.

"நாளைக்கு கூட இப்பிடி தானே இருக்கும்." என்றாள் அவள்.

"ம்..இப்பிடி இருக்கலாம்..ஆனா அப்பாவும் அம்மாவும் இவ்வளவு கலகலப்பா நான் பார்த்த தில்லை. ம்ஹூம்..பார்க்கலாம்" என்றபடி வேற கதைகளை பேசிக் கொண்டு அன்றைய பொழுது போனது.

மறுநாள் ஆதித்யனாரும் அன்னமும் வந்து சேர்ந்தார்கள். சம்பிரதாய பேச்சுகளுக்கு பின் ஆதித்யனார் மகனுடன் ஷுட்டிங் ஸ்பாட் கிளம்பினார். அன்னமும் மஹாவும் அவர்களின் நக்கல் பேச்சுக்களுடன் நேரத்தை சந்தோஷமாகவே கழித்தனர். அன்று சாயங்காலம் விக்ரமும் பெரியவரும் வீடு திரும்பவும் விக்ரம் அசந்து போயிருந்த மஹாவிடம். "ம்..அப்புறம் இன்னிக்கு என்ன சூப் சாப்பிட்டே?" என்றபடி அவள் அருகில் அமர்ந்தான்.

"அது.." என திருட்டு முழி முழித்தவள் அன்னத்தை பார்த்தாள்.

"அப்ப நீ சூப் குடிக்கலையா?" என்றான் விக்ரம்.

"ம்..இல்லியே..நா..வந்து..இன்னிக்கு கீரை சூப் குடிச்சேன்..இல்லம்மா..அம்மா சூப்பரா வச்சு குடுத்தாங்க..விக்ரமிற்கு கொஞ்சம் இருக்காம்மா..ம்ச்..நிறைய குடிச்சிட்டேன். இல்லம்மா" என்றாள்.

"ம்..அது" என அன்னமும் முழித்து கொண்டு மஹாவையும் மற்றவர்களையும் பார்த்தாள்.

விக்ரம் எழுந்து கிடசனுக்கு போவதை காணவும் "நா வர்றேன் விக்ரம்" என்றாள் தாய்.

"நீங்க இருங்கம்மா..நான் எல்லோருக்கும் எடுத்துகிட்டு வருகிறேன்." என்று சென்றவன் எல்லோருக்கும் ஒரு ட்ரையில் எடுத்து வந்தான். பெற்றோர் இருவருக்கும் மகனின் இந்த மாற்றம் ஆச்சரியமாய், அழகாய் இருந்தது. ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர்.

அவன் பெற்றோருக்கு கொடுத்து விட்டு ஒரு கப்பை மஹாவிடம் நீட்டி "இது தக்காளி சூப்..குடி" என்றபடி தன் கப்பை எடுத்து கொண்டு உட்கார்ந்தான்.

"ம்ச்.. விடு தம்பி மாசமா இருக்கும் போது ஒரு நேரம் நிறைய சாப்பிட தோணும் ஒரு நேரம் வேண்டாம்னு தோணும்..சும்மா மிரட்டாதே." என்றாள் அவன் அன்னை மஹாவிற்கு பரிந்து கொண்டு.

"அப்பிடி சொல்லுங்கம்மா..எங்கம்மா கூட சேர்ந்து என்னை ரொம்ப மிரட்டி டாங்கம்மா எல்லாரும்" என்றபடி விக்ரமை பார்த்து "பார்த்தீயா..சப்போர்ட்டை" என்று புறுவத்தை உயர்த்தி கொண்டு சிரித்தாள் மஹா.

மகன் செய்யும் சின்ன சின்ன வேலைகள் பெற்றோருக்கு புதிதாய் தெரிந்தது. மஹாவை கீழே விடாமல் அவன் வைத்திருந்தது அவர்கள் எதிர்பார்த்திருந்தது தான் என்றாலும் முதலில் பார்க்கையில் நன்றாக இருந்தது.

அடுத்து வந்த நாட்களில் மஹாவால் மயக்கத்தை சமாளிக்க முடியாமல் வேலையை விட முடிவு செய்து ரிசைனும் செய்தாள். ஒரு மாதத்தில் மனம் இல்லாது அனுப்ப ஒத்துக் கொண்டார்கள்.ஒரு மாதம் கழித்து எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து கொடுத்து தன் பொறுப்புகளை ஒப்படைத்தாள்.ஆதித்யனார் அவளது பேச்சையும் மிடுக்கையும் பார்த்து சற்று அசந்து தான் போனார்.ஒரு புறம் மகன் அவளை தாங்கினான். ஒரு புறம் மஹா அவனை கொண்டாடினாள். வந்தவர்கள் எல்லோரும் விருந்தில் வாயை பிளந்து தான் போனார்கள்.

எல்லோரும் போகவும் அன்னம் மகனையும் மஹாவையும் நிற்க வைத்து சுற்றி வைத்தபடி "அப்பா எல்லாரு கண்ணும் போகட்டும்." என்றாள் அசதியில் எல்லோரும் சீக்கிரமே படுக்க போனார்கள்.

அடுத்து வந்த ஒரு வாரத்தில் மொத்தமாய் வீடுகளை காலி செய்து ஊர் வந்து சேர்ந்தார்கள் எல்லோரும். 

המשך קריאה

You'll Also Like

233K 9K 42
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்ல...
1.8K 158 7
She slightly kissed his earlobe😚💋..... He breathed heavily as her touch affects him😊 I don't need to seduce u as long as i have this much effe...
240 2 6
உயிருக்கும் மேலாக விரும்பும் தன் காதலியிடம் ஒரு உண்மையை மறைத்து அவளை பிரிந்து வாழும்படி ( நம் நாயகன்) வாசு விற்கு ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.... அத...
1.9K 58 2
ஒரு அழகானப் பெண்ணைப் பார்த்தவுடன் அடையத் துடிக்கும் திருமணமான ஒரு ஆணின் மனம்... வரம்பு மீறும் அவனுக்கு அவளின் பதில் என்ன?