இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

22.3K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல்-11

333 19 0
By Gayathrisivak

        புதிய ஊர்!!புதிய வீடு!! புதிய நிகழ்வு !!புதிய மனிதர்கள் என எல்லாமே புதிதாக இருந்தது அமிர்தாவுக்கு எப்படி கடந்தோ இந்த பொழுது ,பகல் முழுதும் அனைவரும் பரபர வென்று ஏதோ செய்து கொண்டிருந்தனர்.நடுவில் இருமுறை கிரணை பார்த்தாள் அமிர்தா, முதல்முறை எல்லாம் சரியா இருக்க என்று விசாரித்தவன் அடுத்தமுறை புன்னகை செய்தபடி வேகமாக கடந்தான்.சுப்பண்ணா மின்னல் மாதிரி ஓடி கொண்டிந்தார், பானுவும் மஞ்சுவும் சாப்பிட அழைத்தனர் இடையில் ஒருமுறை,இன்று பொழுது வேணு தாத்தாவுடனே கழிந்தது அம்ரூவிற்கு, இரவு வேளை,ஒன்றும் புரியாமல் வாசலில் உளவி கொண்டிருந்தாள் அமிர்தா.

"நல்ல பனியா இருக்கு,வெளிய யாருக்காக காத்துட்டு இருக்க?"குரல் வந்த திசையில் ராம் நின்று கொண்டிருந்தான்.காலையில் கண்டதைவிடவும் இப்போது சற்று வித்தியசமாக தெரிந்தான் ,ஒரு கையில் கருநீலநிற கோட், இறுக அணிந்த சந்தனநிற சட்டை,அதற்கு மேட்ச்சான பெண்ட் மற்றும் டை, நிலவோளியில் பிரகாசமாக தென்பட்ட முகம்,பெண்ட்பையில் இன்னொரு கையைவிட்டவாறு நின்றவனை அடையாளம் காண சற்று நேரம் பிடித்து அம்ரூவிற்கு.

      ஒன்றும் பேசாமல் திரும்பியவளின் அருகில் வந்தவன் ,"என்ன பிரச்சனை உனக்கு !! ஏன் என்கிட்ட இப்படி நடந்துக்குகிற" என்று கடுகடுத்தான் ராமன். அம்ரூ பதில் பேசாது முன் நகர கையை பிடித்தவன், "கேட்கிறேன்? நீ பாட்டுக்கு போன என்ன அர்த்தம்" என்று முடிப்பதற்குள் சீதா பாட்டி தற்செயலாக வெளியே வந்தவர் அதை கவனித்தார்.

"இப்போ என்ன பிரச்சினை இங்க?"  என்றவர் தன் கைகளை கட்டியபடி தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்.அவன் கையை உதறியவள் ,"ஒன்னும் இல்ல பாட்டி" என்று உள்ளே ஓடி மறைந்தாள். பாட்டியிடம் பதில் கூறாது உள்ளே செல்ல முற்பட்டவனை தடுத்தவர், "என்ன ராம் இதெல்லாம்,நீ யாருக்கிட்டயும் வச்சிக்க மாட்டியே ,என்ன விஷயம்!!"

மறுபடி பதில்  பேசாது வேகமாய் திரும்பியவனை கண்டவர்,சற்று தணிந்த குரலில் ,"என்னப்பா ?கேட்டுட்டேன் ஏன் கோபச்சிக்குற, இன்னிக்கு மீட்டிங்லாம் எப்படி போச்சி,எல்லாம் சரியா போச்சிதான என்று பேச்சை மாற்றினார்.ராமன் சுருக்க வார்த்தையில் ,"நல்ல போச்சி பாட்டி" என்று நகர முற்பட, "இருப்பா.. ஏன் ஓடுற ...கல்யாண விஷயமாக உன்கிட்ட பேசனும்பா .. நீ டிரஸ் மாத்திட்டு முகம் கைக்கால் அலம்பிட்டு கீழே சாப்பிட வாப்பா பேசலாம்" என்றவர்க்கு தலை அசைத்தவாறு உள்ளே நுழைந்தான் ராமன்.
       அமிர்தாவை காணவில்லை சாப்பிடும் மேஜையில், ராமனின் கண்கள் அவளை தேடியபடியே சாப்பிடவும் ,மஞ்சு பாட்டி  இவன் மனம் அறிந்தவர் போலே,"எங்கம்மா  அந்த பொண்ணு அமிர்தா? சாப்பிட கூப்பிடவில்லையா பானு!! என்று கேட்க  ,"அத்தை அவளுக்கு மதியம் சாப்பிட்டது ஏதோ ஏதுக்கலை போலை ,எதுவும் வேணாமுன்னு சொன்னா ,நான்தான் பால் மட்டும் குடிக்க சொல்லிருக்கேன் " என்ற பதில் ராமனை வேகமாக சாப்பிட செய்தது.ராம் சாப்பிட்டு எழ சீதா பாட்டி பிடித்து கொண்டார்."ராம் !!!இங்க பாருப்பா எப்போ லேருந்து நீ ஹாஸ்பிடல் போக வேணாமுன்னு முடிவுபண்ணிருக்க ?என்றார். இவனுக்கு பதில் பேசவே மனமில்லாமல் ,ஏன் பாட்டி?, உங்களுக்கு நான் என்ன பண்ண வேணுமுன்னு சொல்லுங்கள்.

நாளைக்கு கண்டிப்பா கோவிலுக்கு வரனும்ப்பா,அப்புறம் சில சடங்கு எல்லாம் இருக்கு அதுக்கெல்லாம் நீ இருக்கனுமே அதான் என்றார்.

ஆமாம் ராம் !! வாரகடைசில நகை டிரஸ் எடுக்க போறோம், அது பிரச்சனை இல்ல அடுத்த அடுத்த வாரம் லேருந்து பூஜை சடங்குன்னு நிறைய வேலை இருக்கும் முக்கியமான மீட்டிங், ஆப்பரேஷனேலாம் வச்சிகாதடா என்று வேணு தாத்தா சேர்த்து கூறவும்.
"சரி தாத்தா ,அதெல்லாம் முன்னாடியே அப்பாவும் மோகன் சித்தப்பாவும் பேசித்தான் இன்னைக்கே வச்சாங்க !!நான் நடுவில் போகிற மாறி தான் இருக்கும்,என்னைக்கு போக வேண்டாமுன்னு முன்னாடியே சொல்லிட்டா ,நான் பெரியப்பா வ சமாளிக்க சொல்லிப்பேன் தாத்தா" என்றான் ராம்.

ஏன்பா அவ்வளவு கிடுபிடியா எதாவது நடக்குதா? என்றார் மஞ்சு பாட்டி.
"வழக்கமா நடக்கிறதான் மா ,இது கொஞ்சம் சீரியஸ் ஆகிடுச்சி, பத்திரிக்கை காரங்க இறங்கி வேலை பாக்கிறாங்க ,இன்னிக்கு ராம் சாமாளிச்சுட்டான் ,ஒன்னும் இல்லமா பாத்துக்கலாம் அதான் எல்லாரும் வந்துடுவாங்கள" என்று  பதிலளித்தார் பத்துமாமா.

"சரி சரி !!சீக்கிரம் தூங்குங்க!! காலையில கிளம்பனும் என்றார் சீதா பாட்டி.விட்டால் போதும் என வேகமாக மாடி ஏறியவனின் கால்கள் அமிர்தா வின் அறையின் முன்னே தயங்கி நின்றது.




Continue Reading

You'll Also Like

166K 6.7K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
28.3K 929 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
106K 4.8K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
109K 6K 28
'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இய...