நிரலி (நிறைவுற்றது)...

By incomplete_writer

14.3K 747 1.3K

இது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே... More

நிரலி-1
நிரலி -2
நிரலி-3
நிரலி-4
நிரலி-5
நிரலி-6
நிரலி-7
நிரலி-8
நிரலி-10
நிரலி-11
author note

நிரலி-9

891 60 63
By incomplete_writer

அம்மா இனி  இதைப்பத்தி ஒன்னும்  பேசவேண்டாம்.. என் வாழ்க்கை நல்லா தான் இருக்கு என்னை பத்தி கவலை இங்கு யாரும் படவேண்டாம் என கூறி தன் தந்தையை அழுத்த பார்த்தவள்... இனி பேசுவதற்கொன்றும் இல்லையென எழப்போக..

நிரலி உக்காரு அப்பா பேசிட்டு இருக்காங்க நீ பாட்டுக்கும் எழுந்தா என்ன அர்த்தம்..

என்னமா பேச சொல்றிங்க..

அப்பா ஏதேதோ பேசுறாங்க நீ ஒன்னும் இல்லைனு சொல்ற கைல வச்சுருக்க டைரி என்ன இங்க கொடு அதை..

அம்மா இப்போ எதுக்கு இதை இழுக்குற டைரியை விடு.. எனக்குத்தான் ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல என்ன உங்க ரெண்டு பேருக்கும் நான் வீட்டுக்கு வரது புடிக்கலையா   அப்படி இருந்தால் சொல்லுங்க இனி இங்க வரலை..

என்னடா இப்படி பேசுற என்னடா ஆச்சு உனக்கு .. அப்பா தெரியாம ஏதோ யோசிக்காம பண்ணிட்டாரு ஆனால் அதுக்காக நீயும் இப்படி பிடிவாதமா இருந்தால் என்ன அர்த்தம்..

அம்மா தெரியாம பன்னிட்டாங்கனு சொல்ற.. ஏதோ குழந்தைங்க விளையாடும் போது அடுச்சுக்கிட்டு சமாதானம் செய்றது மாதிரி.. அது என் வாழ்க்கைமா.. அது அப்டியே மண்ணா போச்சுமா உங்க யாருக்குமே அது புரியலையா...

நானும் மனுசி தான்மா எனக்கும் ஆசை, கனவு இப்படி தான் ஒரு வாழ்க்கை வாழனும் இப்படித்தான் என் வருங்கால கணவன் இருக்கனும் இப்படி எல்லா கனவும் கொண்ட ஒரு சாதாரண பொண்ணு தான்மா... அதுலயும் எல்லா பொண்ணுக போல அப்பாதான் உயிரு அப்பா எது செய்தாலும் நல்லது மட்டும் தாணு கண்மூடி தனமா நம்பிக்கை வச்சு என் மொத்த வாழ்க்கையும் அவரு கைல கொடுத்தேன்... அன்னைக்கு அப்பா சொன்னார்களே இந்த கல்யாணம் நடக்கலைனா செத்துடுவேன்னு அப்போ  எனக்கு எவளோ நேரம் ஆகியிருக்கும் கல்யாணம் நடந்தா நான் செத்துடுவேன்னு சொல்ல... ஆனால் எனக்கு அவங்கள வார்த்தையால கூட நோகடிக்க முடியாம அமைதியா எல்லாத்துக்கும் சரினு சொன்னேன்..

வெறும் வார்த்தைக்கு தான்மா சொல்லலாம் கல்யாண வாழ்க்கைக்கு வயசோ,  படிப்போ,   தேவையில்லை நல்ல மனசு ஒத்துபோய் குடும்பம் நடத்தினால் போதும்னு ஆனால் இங்க அப்படி இல்லை...

கல்யாணம்னா வயசு முக்கியம்  அவங்களுக்கு தகுந்தார் போல படிப்பு கண்டிப்பா இருக்கனும்மா மனசு மட்டும் இல்லை வயசும் ஒத்துபோகணும்.. இல்லைனா எவ்வழியோ கருத்து வேறுபாடு.... அது ரெண்டு பேரும் ஏத்துக்க முடியாம பெரிய பெரிய பிரச்னை தான் வரும்..
கிட்டத்தட்ட இருபது வயசு வித்தியாசம் உள்ள மனுசனுக்கு என்னை கல்யாணம் செய்து கொடுத்தீங்களே.. அவரு இன்னும் இருபது வருஷம் நல்லா இருப்பாருனு வச்சுக்கோங்க அடுத்து வரபோற என்னோட இருபது வருஷ வாழ்க்கை பத்தி கொஞ்சம் யோசிச்சீங்களா...

அதுக்காக வயசு வித்தியாசம் இருந்து மத்தவங்க வாழலையானு கேட்கலாம்..  வாழுவங்க நான் இல்லைனு சொல்லல.. ஆனால் அவங்க எல்லாம் நிம்மதியா சந்தோசமா வாழுறாங்களானு ஒரு தடவை ஒரே ஒரு தடவை அவங்க கிட்ட கேட்டு பாருங்க.. அவங்க மௌனம் மட்டும் தான் பதிலா வரும்..

இங்க நிறைய பொண்ணுங்க வாழ்க்கை பெத்தவங்கலாளே அழிக்கப்படு்து அதுல என் வாழ்க்கையும் ஒன்னு.. அவ்ளோதான் நான் இனி அந்த வாழ்க்கை தான் வாழப்போறேன்... என் வாழ்க்கை முடுஞ்சு போன அத்தியாயம் அதை யாரும் புதுப்பிக்க நினைக்க வேண்டாம்.. எனக்கு செய்த கொடுமையை என் தங்கைக்கு செய்திட வேண்டாம்.. பாவம் அவளுக்கு என்னை போல செத்து செத்து வாழ முடியாது..

பெத்தவங்க அவங்க விருப்பத்தை பொண்ணுமேல திணிக்கிறதே தப்பு.. இதுல பிடிவாதத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்குறது எவளோ பெரிய தப்பு...

ஆமா இப்போ சொல்றேன் எனக்கு அங்க இருக்கது நரகத்தை விட கொடுமையா தான் இருக்கு.. வாழ்க்கைல எந்த பொண்ணும் அனுபவிக்க கூடாத எல்லா கொடுமையும் அனுபவிச்சுட்டேன்.. அனுபவிக்குறேன் இனியும் அந்த கொடுமையை அனுபவிக்க தயாரா தான் இருக்கேன் எதுக்கு தெரியுமா..

இதோ இதோ இங்க உக்காந்துருக்காரே என்னைய இந்த உலகத்துல நல்ல படியா வாழ வைப்பாருனு நெனச்சு... எல்லா முடிவும் அவரே எடுக்கட்டும்னு அவர் கைல கொடுத்துட்டு எல்லாத்தையும் இழந்து நான் ஒரு நடைபிணமா வாழுறத அவரு கண் குளிர பாக்கணும் அதுக்காக தான்...

அம்மாடி நிரலி என்னடா சொல்ற நீ உனக்கு அங்க நிம்மதி இல்லையா.. என்ன நடந்துச்சு ஏதாவது தெளிவா சொல்லுங்களேன்.. என்னங்க நீங்களாச்சும் சொல்லுங்களேன் என் பொண்ணுக்கு என்னதான் ஆச்சு அவ இப்படி பேசுறா நீங்க இப்படி அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்..

நான் என்ன சொல்லுவேன் எப்படி சொல்லுவேன்.... என்னால என் புள்ள வாழ்க்கை போச்சு... அம்மா செத்துருவேன்னு சொல்லவும் என்னால வேற எதுவும் யோசிக்க முடியலை ஆனால் அது என் பொண்ணு வாழ்க்கை மொத்தமா முடுஞ்சு போற அளவுக்கு இருக்கும்னு நான் நினைக்கல..

நான் என் வாயால எப்படி சொல்லுவேன் என் பொண்ணு பட்டகஷ்டத்தை நான் எப்படி சொல்லுவேன்.. எந்த அப்பனும் இப்படி ஒரு கொடுமை தன் புள்ளைக்கு நடந்தால் அதெல்லாம் தெரிஞ்சு எப்படி தாங்கிப்பான்.. சித்து அது..

சும்மா நிறுத்துங்க சும்மா சும்மா என் பொண்ணு என் பொண்ணுன்னு சொல்லிக்கிட்டு.. உங்க பொண்ணு செத்து மூணு வருஷம் ஆச்சு.. இங்க இப்போ இருக்கது ஒரு கொடூரனுக்கு வாக்குப்பட்டு வாழ்க்கையை தொலைச்சு நிக்குற ஒரு சாதாரண பொண்ணு... இனி நான் உங்க வீட்டுக்கு வரது சரி இல்லைனு நினைக்குறேன் நான் கிளம்புறேன்.. அப்பறம் அம்மா ஒரு பொண்ணா நீ ரொம்ப கொடுத்து வச்சுருக்க அதான் அப்பா உன் வாழ்க்கைல வந்துருக்காங்க...

நான் இனி இங்க வரலமா என்னைப்பத்தி ரொம்ப யோசிக்காத என் வாழ்க்கை கண்டிப்பா சமாளிச்சுப்பேன்.. எனக்கு ஒரு பிரெச்சனைனு உன் பொண்ணா இங்க வந்து நிக்கமாட்டேன் அந்த வீட்டு மருமகளா எப்போவாச்சும் வரேன்.. நான் போறேன்மா...

என்னடா இப்டிலாம் பேசுற.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் நில்லுடா.. எனக்கு தலையே வெடிக்குது ரெண்டு பேரும் புரியற போல பேசாமாற்றிங்க... என்ன நடந்துச்சு சொல்லித்தான் தொலைங்களே...

நிரலி உனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்டா.. விவாகரத்து வாங்கிடலாம்டா.. நான் ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச வக்கீல் கிட்ட பேசிட்டேன்.. இதுக்கு மேலையும் உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம்டா..

நீங்க சொன்னா கல்யாணம் பண்ணிக்கணும் நீங்க வேண்டாம் சொன்னா விவாகரத்து பண்ணிடனுமா.. நீங்க செய்த தப்புக்கு உங்களுக்கு தண்டனை கொடுக்கணும் அதுக்காக நிச்சயம் என்னால உங்கள ஜெயில கூட வைக்க முடியும் ஆனால் நான் அப்படி செய்ய போறதில்ல..

நீங்க அமைச்சு கொடுத்த வாழ்க்கையை வாழப்போறேன் நான் படுற கஷ்டத்தை பார்த்து கண்டிப்பா நீங்க கஷ்டப்படுவீங்க அது தான் நான் உங்களுக்கு கொடுக்குற தண்டனை இப்போ நான் போறேன் என எழுந்துகொள்ள...

டேய் அப்பா தெரியாம பண்ணிட்டேன்டா இவளோ பெரிய தண்டனை எனக்கு கொடுக்குறதா நெனச்சு உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காத...

தெரியாம பண்ணிட்டிங்களா.. சரி தெரியாம பண்டிங்க நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு மட்டும் உங்க மனசுல இருந்து உண்மையா ஒரு பதில் சொல்லுங்க..

கேளுடா என்ன கேள்வி வேணும்னாலும் கேளு ஆனால் அந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம் வந்துடு....

கசப்பாய் சிரித்தவள்.. அன்னைக்கு உங்க அம்மா கண்ணீர் கண்டு எனக்கு திருமணம் செய்து வைத்திங்களே...  அப்போ அந்த இடத்துல நான் பொண்ணா இல்லாம அதாவது உங்களுக்கு மூத்த பிள்ளை பையனா இருந்திருந்தால் இதே போல ஒரு திருமணம் செய்து வச்சுருப்பீங்களே அதுக்காக வயசா பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுருப்பீங்களா கேட்கல சாதாரணமா ஒரு கல்யாணம் பண்ணி வச்சுருப்பீங்களா..

மகளது கேள்வியில் ராஜா ஆடி போக.. சித்ரா உறைந்து போனால்.. இதுவரை தந்தை சொல் தட்டாதவள்.. தந்தை எது செய்தாலும் சரி என்றவள் இன்று இவ்வளவு பேசுகிறாள் என்றால் தன் மகள் அந்த வீட்டில் எத்தகைய கொடுமை அனுபவித்திருப்பாள் என எண்ணுகையிலே சித்ராவால் அடுத்து எதையுமே யோசிக்க முடியவில்லை.. ஓடிச்சென்று தன் மகளை கட்டிக்கொண்டு கலங்கிவிட்டாள்..

ராஜா அடிபட்ட நாய் போல் தன் மகளை பாவமாக பார்க்க.. தன் தாயிடம் இருந்து பிரிந்து சிறிது இடைவெளி விட்டு நின்றவள்.. எனக்கு பதில் சொல்லியாக வேண்டும் என ராஜாவை கடுமையாக பார்க்க அவரோ பதில் பேச முடியாமல் திணறி போய் நின்றார்..

ஆம்.. தன் மகள் கேட்டது போல் அன்று அந்த இடத்தில் ஒரு பையன் இருந்திருந்தால் இப்படி செய்திருப்போமா.. நிச்சயம் இல்லையே.. என்னை மன்னுச்சுடுமா என ராஜா பரிதபமாக கேட்க... என் கேள்விக்கு இது பதில் இல்லை.. பண்ணிருக்க மாட்டேன் தான் ஆனால் எனக்கு இப்போ மன்னிப்பு கேட்கிறது தவிர வேறு வழி தெரியலடா ரொம்ப வலிக்குதுடா...

அவரின் பதில் இதுவாக தான் இருக்கும் என முன்னமே தெரியுமே அவருக்கு சிரிப்பு ஒன்றை பரிசாக கொடுத்தவள்.. எல்லாம் முடுஞ்சது.. என் அப்பா எப்படிப்பட்டவருனு நான் நெனச்சுட்டு இருந்தேன் தெரியுமா.. அன்பால எதையும் செய்ய கூடியவர்.. ஆண் என்ற கர்வத்தில் எதுவும் செய்யமாட்டார் இப்படி தான் நெனச்சுருந்தேன்.. ஆனால் மொத்தமும் போச்சு.. நீங்க கூட ஒரு ஆணாதிக்கம் பிடித்தவர் தான்...

அப்போ அன்னைக்கு நீங்க செய்தது உங்க அம்மா மேல பாசத்தினால் இல்லை நீங்க சொல்லி நான் ஒதுக்கலைனு அதுல இருக்க நல்லது கேட்டது யோசிக்காம.. ஒரு பெண் தன்னை எதிர்த்து பேசுறேன்னு உங்க ஆண் பலத்தை அடி மூலமா என்மேல இறக்கிட்டு நீங்க நெனச்சதை முடுச்சுருக்கீங்க..

ஓகே இதுவரை நீங்க எனக்கு செய்ததே போதும்..  இனி நான் என் வாழ்க்கை பார்த்துக்குறேன் ஆனால் நிச்சயம் உங்களுக்கு தண்டனை கொடுக்கணும் அதுக்கு நான் தினம் தினம் துடி துடிச்சு சாகுறதை நெனச்சு நீங்க துடிக்கணும் என கூறி ஒரு எட்டு எடுத்து வைக்க....

அந்த ஆறடி ஆண்மகன் தன் உயிரணுக்களில் உருவாகி இன்று வளர்ந்து உருகி மருகி நிற்கும் தன் மகளின் கால்களில் விழுந்து கலங்கிக்கிடந்தார்...

********************************

Story oda positive and negative comments venum..

Bcoz apo than enala next ud fulfill ah koduka mudium...

Nirali edukura mudivu sarinu ninaikuringala...??

Avnga appa antha thandanai than sariya irukumnu thonutha???

Pengala romba uyarthi aangalai thavaravana muraiyila sithagarikura pola thonutha..??

Kathaiyin poku epadi iruku..

Continue Reading

You'll Also Like

27.9K 1.4K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
20.6K 808 7
தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.
571 28 1
எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு குட்டியா கியூட்டா ஒரு காதல் கதை எழுதணும் அப்டின்னு. அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சப்போதான் இந்த கதை எழுதினேன். ரொம்ப பெரிய க...