யாரோ (Completed)

By ezhilaras

27.9K 1.1K 107

இது உஷாவின் சுவாரஸ்யமான​ சுயசரிதை. More

அதிகாலை
த்ரி ரோஸஸ்...
யார் மகள்
பயணம்
நட்பு
அன்று ....
சந்தேகம்
குழந்தை
தாய்ப்பாசம்
கனவு
அம்மா
லஷ்மிமா
தேவதை
மகிழ்ச்சிப்பூ
அழுகை
லீலை

சர்ப்ரைஸ்!

1K 50 5
By ezhilaras

அன்று ஞாயிற்றுக்கிழமை. நிவியின் வீட்டிற்கு கிளம்பினேன். அவளுக்கு போன் செய்தேன்.  நாட் ரீச்சபிள் என்று பதில் வந்தது. இருந்தாலும் வீட்டிற்கு சென்று காலிங்பெல்லை அழுத்தினேன். வேலைக்காரம்மா வந்து கதவை திறந்தாள்.
"நிவி இல்லையா?"என்று கேட்டேன்.
நிவிமாவும் ஐயாவும் ஆபீஸ்கு போயிருக்காங்க."
"ஆண்டி?"
"அவுங்க இங்க பக்கத்துல இருக்குற கோயிலுக்குதான் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க."
"சரி அப்ப நான் கிளம்பறேன். ஈவினிங் வரேன்" என்றேன்.
அப்போது என் செல்போன் ஒலித்தது. எடுத்து பார்த்தேன். நிவி தான். எடுத்து பேசினேன்.
"ஹலோ"
"ஹாய் உஷா எங்க இருக்க?"
"உன் வீட்ல தான் இருக்கேன். யாருமில்லை. அதான் கிளம்பிட்டிருக்கேன்"
"அத்தை இன்னும் கோயில்ல இருந்து வரலியா?" இப்ப வந்துடுவாங்க. அங்கே ஏதாவது புக்ஸ் இருக்கும். நீ படிச்சிட்டே இரு. இல்ல டிவி பாத்திட்டு இரு. நான் இன்னும் அரை மணி நேரத்தில் வந்திடுவேன். பேகாதே."
"சரி இருக்கேன். நீ சீக்கிரம் வா"
"ஓகே."
போனை கட் பண்ணி விட்டு பார்த்தேன். அங்கே ஒரு பெரிய பேக் நிறைய புத்தகங்கள் இருந்தன.
"ஏன் புக்ஸையெல்லாம் இங்க வச்சிருக்கீங்க" என்று வேலைக்காரம்மாவிடம் கேட்டேன்.
அதற்குள் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு "வேஸ்ட் பேப்பர் கடையில் போடச் சொல்லி வச்சிருக்காங்க. இதோ இப்ப எடுத்திட்டு பேகணும்."என்றாள்.
"என்ன புக்ஸ் நான் பாக்கட்டுமா"
"பாருங்கமா. பிடிச்ச புக் இருந்தா படிக்க எடுத்துக்கங்க."
பார்த்தேன். சில புக்ஸும் சில டைரிகளும் இருந்தன. எல்லாம் அங்கிளோட டைரிகள். அதில் இருந்து ஒன்றை எடுத்தேன். 1996ம் வருட டைரி  கையில் வந்தது. இது நாங்கள் பிறந்த வருடம். நிவியின் அம்மாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை அந்த டைரியைப்படிக்க தூண்டியது. அடுத்தவர் டைரியைப் படிப்பது தவறு என்று மனம் தடுத்தது. அவர் அறையில் இருந்து எடுத்து படித்தால் தான் தவறு. வேஸ்ட் பேப்பர் ஆன பிறகு படிப்பது தவறில்லை என்றும் தோன்றியது. அந்த டைரியை மட்டும் எடுத்து என் பேகில் வைத்து கொண்டேன். காபியை குடிக்க ஆரம்பித்தேன்.
"என்னம்மா எந்த புத்தகமும் வேண்டாமா? நான் கடைக்கு கொடுத்து விடவா? "என்றாள் வேலைக்காரம்மா.
எனக்கு குப்பென்று வியர்த்தது .
"வேண்டாம். நீங்க வேஸ்ட் பேப்பர் கடையில் போட்டுடுங்க. நான் கெளம்பறேன். கொஞ்சம் வேலையிருக்கு. அதை முடிச்சிட்டு ஒரு மணிநேரத்தில வந்திடுவேன்னு நிவி கிட்ட சொல்லிடுங்க." என்று கூறிவிட்டு கிளம்பினேன்.

என் அறைக்குள் சென்று கதவை தாளிட்டேன். டைரியை எடுத்தேன்.
ஜனவரி இருபத்தி இரண்டு தேதியின் பக்கத்தை எடுத்தேன். ஏன் தெரியுமா? அதுதான் எங்கள் மூவரின் பிறந்தநாள். ஆம் ஒரேநாளில் தான் நாங்கள் மூவரும் பிறந்தோம். நாங்கள் நெருங்கிய தோழிகளாக ஆனதற்கும் எல்லோரும் எங்களை த்ரிரோஸஸ் என்று அழைத்ததற்கும் இதுவும் ஒரு காரணம்.
ஜனவரி 22ம் பக்கத்தை திறந்து படிக்க ஆரம்பித்தேன். ஏனோ நெஞ்சம் படபடவென்று வேகமாக துடித்தது. அதைவிட வேகமாக படித்து முடித்தேன். கொஞ்சம் நேரம் அமைதியாக அப்படியே அசைவின்றி கிடந்தேன். பின் ஏதோ மயக்கத்திலிருந்து எழுந்தது போல் தெளிந்தேன். திரும்பவும் படித்தேன். ஆனால் இம்முறை மிகவும் நிதானமாக படித்தேன். திரும்பவும் படித்தேன். கிட்டத்தட்ட பத்து முறையாவது​ படித்திருப்பேன்.
இப்போது ஏதோ திரையரங்கத்தில் படம் பார்ப்பது போல், படித்ததை காட்சிகளாக கற்பனை செய்து பார்த்தேன். பிறகு அடுத்த அடுத்த பக்கங்களையும் படித்து முடித்தேன்.

மகிழ்ச்சியா, துன்பமா, கோபமா, இல்லை என்ன செய்வதென்ற குழப்பமா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவை அனைத்து உணர்வுகளும் அடுத்து அடுத்து விடாமல் துரத்தின.

என் கைபேசியில் அழைப்பு மணி ஒலித்தது. எடுத்து பேசினேன். மறுமுனையில் நிவி தான்.
"  ஹாய்! நான் வெய்ட் பண்ண தானே சொன்னேன். ஏன் கிளம்பிட்ட? சீக்கிரம் வீட்டுக்கு வா. "
"வரேன். "
"கம் ஸூன். யு ஹேவ் எ சர்ப்ரைஸ்"
"ஏற்கனவே வந்த சர்ப்ரைஸே இன்னும் டைஜஸ்ட் ஆகல. அதுக்குள்ள இன்னும் சர்ப்ரைஸா."
"என்ன சர்ப்ரைஸ் ஏற்கனவே வந்தது.
என்கிட்ட நீ ஒண்ணுமே சொல்லலையே."
எனக்கு திக்கென்றது. என்ன இது இப்படி உளறி விட்டோமே என்று சிந்திக்கும்போதே..
"ஹேய் என்னப்பா சத்தத்தையே காணோம். லைன்ல தானே இருக்க"
"நான் இப்ப வீட்டுக்கு வரேன்."
"சரி வா ."
"ஓகே "
என்று பேனை கட் செய்தேன். டைரியை யார் கண்ணிலும் படாதவாறு மறைத்து வைத்தேன்.
நிவி வீட்டிற்கு கிளம்பினேன். நிவியின் வீட்டில் அனைவரும் இருந்தனர். அனைவரும் என்னை பூஜை அறைக்கு அழைத்து சென்றனர். அங்கிள் பூஜை அறையில் நிவியின் அம்மா படத்தின் முன் வைத்திருந்த ஒரு ஃபைலை எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் திருதிருவென்று விழித்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "படித்துப் பார்" என்றாள் நிவி.
நாங்கள் அனைவரும் ஹாலுக்கு வந்து ஸோபாவில் அமர்ந்தோம்.
அந்த ஃபைலில் ஒரு டாக்குமெண்ட் இருந்தது. பிரித்து படித்தேன். அங்கிள் அவரின் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றை எனக்கு அளிப்பதாக பத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தது. " நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன். ரெண்டு பாஸ்போர்ட் ஸைஸ் ஃபோட்டோ, வோட்டர் ஐடி எல்லாம் எடுத்திட்டு நாளைக்கு காலைல டென்தர்ட்டிக்கு டைரக்டா ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வந்திடு" என்றாள் நிவி.
"வாட் இஸ் திஸ்? எதுக்காக எனக்கு எழுதி கொடுக்கணும். ஹேய் திஸ் இஸ் டூ மச். எனக்கு வேண்டாம். அங்கிள் ப்ளீஸ் எனக்கு இதெல்லாம் வேண்டாம். உங்க அன்பு மட்டும் போதும்." என்றேன்.
"இது நிவியோட அம்மாவோட விருப்பம். அவளோட கனவு. அவளோட கட்டளை" என்றார் அங்கிள்.
எனக்கு மிகவும் குழப்பமாக​ இருந்தது.

--------------------*************-------------------
Hi friends,
Thank you for reading. You may have more questions. There are answers in the next part. Continue reading. I will update soon. Thank you for voting.

Continue Reading

You'll Also Like

4.3K 287 4
Revisiting the Pandian Stores I loved from the day one I started watching it. Thought to take you all together with me in this journey through the se...
11.6K 649 14
It's a love story between Anjali and Sriram. For Anjali, it's love, true love. For Sriram, maybe it's not. does he have any other intention? Did he...
908K 87.5K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...