றெக்க வச்ச பன்றி

240 9 10
                  

சேவல் கூவலுடன் சிவந்த வானத்தைப் பார்த்ததும் அந்த கூரை வீட்டில் இருந்து வெளிப்பட்டாள் சிவகாமி. மானிற தோற்றத்தில் கண்கள், கைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு தன் ஐம்பது வயதை அப்பட்டமாக வெளில் காட்டியது. நெளிந்து போன சில்வர் குடத்தில் தழும்பத்தழும்ப கொண்டுவந்த தண்ணீர் மண்ணில் சிந்த, தன் கைகளால் தண்ணீரைத் துண்டு துண்டாக வெட்டி வாசலில் தெளித்துவிட்டு உள்ளே சென்ற போது இவளுக்காவே காத்திருந்த அந்த பக்கத்து வீட்டு கிழவி குறிக்கிட்டாள்.

"ஏன்டி சிவகாமி நாளைக்கு என் பெயரன் பட்டனத்துல இருந்து வரான் தெரியும்ல"

"தெரியாதே கிழவி.... ஆனாஅவன் தான் வருஷம் வருஷம் வரானே"

"வரும் போது என்ன எல்லாம் வாங்கிட்டு வரானோ யாருக்கு தெரியும்"

"பாத்து கிழவி, வரும் போது அவனுக்கு பொண்சாதிய வாங்கிட்டு வந்திட போறான்"

"வாய கழுவு டி பீத்த சிறுக்கி.... என் பேத்திக்கும் பெயரனுக்கும் அவங்க பிறந்த அப்போவே முடிவு பன்னி வச்சுருக்கேனாக்கும்"

"அதையும் பார்க்க தான போறோம்."

"அவன என்ன கோட்டியானு நினைச்சியாக்கும், புத்தி கழண்ட பய..."

"ஏய் கிழவி என் புள்ளைய கோட்டியானு சொல்லாதனு எத்தன தடவ சொல்றது?..."

"ம்ம்க்ம்.... நான் மட்டும் தான் சொல்ற மாதிரி சொல்லுறா பாரு.... ஊரே அப்படி தான் சொல்லுது."

கிழவி தன் வாயினுள் வார்த்தைகளை முனங்கவிட்டு விழுங்கிச்செல்ல, சிவகாமி கோபத்தில் தடார் என குடத்தை தரையில் போட்டு அடித்துவிட்டு உள்ளே சென்றாள்.

"வாண்டுகளா என்ன டா பன்னுறிங்க?"

"நாங்க என்ன பன்னுனா உனக்கு என்ன டா கோட்டி..... எங்க அம்மா உன் கூட எல்லாம் விளையாட கூடாதுனு சொல்லிருக்கு...."

"என்ன பார்க்க வச்சு விளையாடாதிங்க டா அப்புறம் கருப்பு பிடிச்சிட்டு போய்டும்...."

சுமார் இருபதிலிருந்து இருபத்திஐந்து வயதிருந்தது அந்த இளைஞனுக்கு. கந்தலான சட்டை, அரைக்கால் ட்ரௌசர் தன் புனைப்பெயர் 'கோட்டியான்' என்பதற்கு ஏற்றார்போல் இருக்க, ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து கொண்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தான்.

றெக்க வச்ச பன்றி (Completed)Where stories live. Discover now