💙 ஓவியம் 17

6.7K 229 7
                                    

இரவு உணவை முடித்து விட்டு தீபனும், நித்திலாவும் காரில் ஏறப் போகையில், நித்தி தீபனிடம் "தீபு நான் ஒரு விஷயம் கேப்பேன். வாங்கி தர்றீங்களா?" என்றாள் இறங்கிய குரலில்.

"இப்படி நீ என்கிட்ட ஏதாவது வாங்கி தர்றீங்களான்னு கேக்கறதுக்காக தீபு வெயிட்டிங்டா லாலிபாப், ஐ'ம் ஸோ எக்ஸைட்டட்! என்ன வேணும்னு கேளு பேபி!" என்றவனிடம்

"எனக்கு குல்பி வேணும் தீபு. அங்க வண்டியில ஒரு அண்ணா வச்சு இருக்காங்க. குட்டீஸ் கூட நிறைய தடவை சாப்பிட்டு இருக்கேன் தீபு! அவங்க நியாபகம் வந்துடுச்சுப்பா!" என்றவளை தோள்களில் கைகளை போட்டு அணைத்துக் கொண்டான் தீபன்.

"இந்த கேள்வியை இப்போ கேட்டா கண்டிப்பா எனக்கு நீ மசாஜ் பண்ணி விடுவ லாலிபாப், ஆனாலும் என்னால கேக்காம இருக்க முடியல. இந்த குல்பி சாப்பிடுறது மட்டும் ரொம்ப ஹைஜீனிக்கா?" என்று சிரிப்புடன் கேட்டவனிடம் பதில் சொல்லாமல் நித்திலா முறைக்கவும், "சரி ஓகே வா சாப்பிடலாம்!" என்று அவளுடன் சென்று குல்பி சாப்பிட்டு கிளம்பினார்கள்.

வரும் வழியில் தீபன் நித்தியிடம் "நிது உன் மனசுல இருக்கறத எங்கிட்ட நீ ஃப்ராங்கா பேசலாம்! தீபு கிட்ட நீ எதப் பேசறதுக்கும் உனக்கு ரைட்ஸ் இருக்கு. ஸோ என்ன வேணுமோ, என் கிட்ட கேளு. ஏதாவது சொல்லணுமா அதை தைரியமா சொல்லு. சரியா?" என்றான் தீபன்.

நித்திலா சிரிப்புடன், "ஆமா! ஆமா! என் மனசுல இருக்கிறதை ஃப்ராங்க்கா பேசணும்னா அத தீபு கிட்ட பேசாம, வேற யார் கிட்ட பேசுறது?" என்று கெத்தாக சொன்னவள் தன் தொண்டையை ஒரு முறை கனைத்துக் கொண்டு,

"டேய் தீபன் சக்ரவர்த்தி! உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்டா. உன்னோட அம்ரிமா மாதிரி உன் மேல அன்பு காட்டணும். உன் அப்பா மாதிரி உன்னை கண்டிக்கணும். உன் ப்ரெண்ட் மாதிரி உனக்கு தோள் கொடுக்கணும். அப்பப்போ உன் ப்யாரி பச்சி போல உன் மடியில நான் சுருண்டு படுத்துக்கணும். உன்னை நிறைய லவ் பண்ணி உன்னோட டெவலப்மெண்ட்டுக்கு நான் சப்போர்ட் பண்ணனும்!" என்று உரிமையோடு ஒருமையில் நித்திலா பேச பேச தீபன் தன் தாயின் சாயலை நித்தியிடம் கண்டான். எப்போதும் அவள் ஒருமையில் அழைத்தால் மகிழ்பவன், இன்று நெகிழ்ந்து போய் அமர்ந்து இருந்தான்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now