இந்தியா 2020

39 17 15

இருளில் இருந்து பிறக்கிறோம் - இவ்வுலகிற்கு

இருள் சூழ பிரிகிரோம் -
இவ்வுலகை விட்டு

வாழும் காலமேல்லாம் வசந்தகாலமானால்
வாழ்க்கையில் ஏது சுவாரஸ்யம்.

சறுக்கல்கள் தேவை - நம் பாதையை
சரியாக அமைப்பதற்கு

இன்னல்கள் தேவை - வாழ்வில்
எதிர் நீச்சலிடுவதற்கு...

துவண்டு விடாதே தோழா - வெற்றி வெகு துலைவில் இல்லை...

தன்னம்பிக்கை என்னும் கயிரை பிடித்து கொண்டு வீர நடை போடு!

உன் பாதைகள் பூக்களால் ஆனதில்லை,
பாதாளங்களால் ஆனது.
பார்வை சற்று தடுமாறினாலும்
பயணத்தில் தோல்வியே!

தோல்வியை துரத்தியடிக்க பிறந்தவன் நீ !
பார்வைகளை விரிதாக்கு
பயணங்களை எளிதாக்கு...

தொலைநோக்கு பார்வை கொண்டு நம்மிடம் ஓப்படைத்த
" இந்தியா 2020 "
வெகு தொலைவில் இல்லை....

வித்திட்டவர் உன்னுடன் இல்லை
விழுதுகளை நம்பி சென்றுள்ளார் -
விண்ணிற்கு.

கடமையை செய்ய
காலம்கடத்தாதே!

விரைந்து செல் விழிப்புடன் !

நான்காண்டுகளே உள்ளன
நம் கையில் !

-இந்தியா 2020.

இந்தியா 2020Read this story for FREE!