33 முகிலனின் மறுப்பு

Start from the beginning
                                    

"ஸ்வீட் சாப்பிட்டு தான் ஆகணும்னு நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். கவலைப்படாதீங்க" என்று சிரித்தாள் அவள்.

"நான் அதைப்பத்தி பேசல"

"சரி சொல்லுங்க" என்று அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நம்ம கல்யாணத்தை நிறுத்த யாரோ முயற்சி செஞ்சாங்கன்னு இளங்கோ சொன்னான்" என்ற அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் இலக்கியா.

"நம்ம கல்யாணத்தை நிறுத்தவா? ஏன்?" என்றாள் அந்த அதிர்ச்சி மாறாமல்.

"நமக்கு கல்யாணம் நடந்த மண்டபத்துல ஒரு ஆளை கையும் களவுமா பிடிச்சிருக்கான் இளங்கோ"

அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் கூறினான் அவன். அதை வைத்து இலக்கியாவே ஊகித்துக் கொண்டாள், அது யாராக இருக்க முடியும் என்று.

"அந்த ஆளை யார் அனுப்பினதுன்னு இளங்கோ கண்டுபிடிக்கலயா?" என்றாள் அவன் அதற்கு பதில் அளிக்கிறானா இல்லையா என்று தெரிந்து கொள்ள.

ஆம் என்று தலையசைத்த அவன் அது யார் என்று கூறவில்லை. இலக்கியாவும் அது யார் என்று கேட்கவில்லை. கேட்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இப்படிப்பட்ட வேலையை செய்யக்கூடியவள் ஒருத்தி தானே இருக்கிறாள்...!

"நீ ஜாக்கிரதையா இருக்கணும்" என்றான் அவன் அக்கறையோடு.

"ம்ம்ம்"

"அவசியம் இல்லாத வரைக்கும், எங்கேயும் போகாதே"

"ம்ம்ம்"

"அப்படி உனக்கு எங்கயாவது போகணும்னா, முன்னாடியே என்கிட்ட சொல்லிடு. நான் உன்னை கூட்டிகிட்டு போறேன் "

"ம்ம்ம்"

"நம்ம ஜாக்கிரதையா இருக்கணும். கேர்லெஸ்ஸா இருக்காதே."

"ம்ம்ம்"

முகத்தை சுருக்கி அவளை பார்த்தான் முகிலன். ஏனென்றால் அவள் வழக்கமாய் பேசுவது போல் கலகலவென பேசாமல், அவன் கூறிய அனைத்திற்கும் *உம்* கொட்டிக் கொண்டு இருந்தாள். அவள் அவனுக்கு இனிப்பை ஊட்டி விட்ட போது, அவன் சாப்பிடவில்லை என்பதால் அவள் வருத்ததில் இருக்கிறாள் என்று எண்ணினான் அவன்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now