உங்களுக்கு ஒடம்பு சரியில்லயாப்பா? டாக்டர்ட்ட வேணும்னா போயிட்டு வரலாமா?  ஒருமாதிரி நெர்வஸா இருக்கீங்களே?" என்று கேட்ட தன்னுடைய மகளைப் பார்த்து புன்னகைத்தவர்,

"நீ ரொம்ப ஸ்மார்ட் கேர்ள்னு எனக்கு ஏற்கனவே தெரியும் பவிம்மா! பட் உன்னோட டஃப்னெஸ் எவ்ளோன்னு எனக்கு இதுவரைக்கும் தெரியல. பட்
இன்னிக்கு அது தெரியப்போகுது. இந்த வீட்டுக்கு யாருடா ஓனர்?" என்று அவளிடம் கேட்ட தன்னுடைய தந்தையின் பேச்சு ஒருமார்க்கமாக இருப்பதைப் பார்த்து நெற்றி வியர்த்தது சாம்பவிக்கு.

"நீங்.....க தான்ப்பா! ஓனர்!" என்று சொன்னவளிடம் இல்லையென தலையசைத்து,

"ம்ஹூம்! யூ ஆர் ராங்! இந்த வீடு உனக்கு கிப்ட்டா குடுக்குறதுக்காக நான் வச்சிருக்குற அசெட்! இதோட இஎம்ஐயும் டாடி முடிச்சுட்டேன்; ஸோ முழுக்க முழுக்க உன்னோட ப்ராப்பெர்ட்டி! அதாவது இந்த வீட்டுக்கு நீதான் ஓனர்! ஆனா உனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என்னிக்காவது ஒருநாள் இந்த வீட்ல நீ சந்தோஷமா உனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது ஒரு மொமண்ட்ட என்ஜாய் பண்ணியிருக்கியா? சத்தமில்லாம நிறைய அழறத தவிர வேற ஏதாவது கேம் விளையாடுறது, ட்ரா பண்றது, கார்டன்ல செடி வளர்க்குறது, இல்ல கிச்சன்ல இருக்குற அரேன்ஜ்மெண்ட்ஸ வேற மாதிரி மாத்துறது இதெல்லாம் செஞ்சிருக்கியா பவிம்மா?" என்று கேட்டவரிடம்,

"அதுக்கெல்லாம் அலவ் பண்ணுனா தானப்பா நான் அதையெல்லாம் ட்ரை பண்ணிப் பாக்க முடியும்?" என்று அவசரப்பட்டு அவரிடம் சொல்லி விட்டு தன்னுடைய நாக்கை கடித்துக் கொண்டாள்.

"ஸோ இந்த வீட்ல நீ உனக்கு இஷ்டப்பட்ட படி இருக்குறதுக்கு கூட ஒரு பெர்மிஷன் தேவைப்படுது! அப்டிதான?" என்று கூர்பார்வையில் அவளிடம் வினவினார் சபாபதி.

"அது வந்து..... நான் கொஞ்சம் சின்னப் பொண்ணுல்லப்பா? அதுனால கேம் விளையாடுறது, ட்ரா பண்றது, கார்ட்ன்ல செடி வளர்க்குறது, கிச்சன் அரேன்ஜ்மெண்ட்ஸ பாத்துக்குறது இதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்ல டாடி......!" என்றவளிடம் பெருவியப்புடன்,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now