அத்தியாயம் 18

564 22 0
                                    

தன்னிடம் கேட்ட அன்றே வந்து இறங்கிய ஆராதனாவை கண்டு "என்னடா இது?" என்று நினைத்த வள்ளி பாட்டி வெளியே எதுவும் கேட்காது மகிழ்ச்சியாகவே அவளை வரவேற்றார்.

" என்னம்மா இது இப்படி இழைச்சு போய் இருக்க?"
என்று கேட்டவாறே அவளை சோபாவில் அமர வைத்து காபி போட்டுக் கொடுத்தார் பாட்டி..
காபியை குடித்த பிறகு தான் சற்றுத் தெம்பாக உணர்ந்தாள் ஆராதனா.

அத்தைகள் இருவருமே அவளையும் கணவனையும் சேர்த்தே நலம் விசாரித்தனர். அவர்களிடம் பதில் சொன்னவள் எழுந்து அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரவு உணவை அறையின் உள்ளே உண்டவள் மனச் சோர்வினாலும், குழந்தை உண்டானதால் ஏற்பட்ட சோர்வினாலும் படுத்த உடனே உறங்கிவிட்டாள்.


ஆபீஸில் இருந்து வீட்டிற்கு வந்த ரிஷி வேலையாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பதை கண்டான்.. ஒருவேளை தூங்கியிருப்பாள் என்று நினைத்து நேரம் பார்க்க அது 7 மணி 20 நிமிடம் என்று காட்டியது..
என்ன இது இவ்வளவு நேரத்தோடு தூங்கி இருப்பாளா என்ற சந்தேகத்தோடு சென்று பார்க்க அவள் அங்கு இல்லை...

"இவளை ....."
என்று சற்று சத்தமாகவே கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்து விட்டான்.
வெளியில் வந்து அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தவன் அதில் மனைவியின் குறுஞ்செய்தியை பார்த்து நெற்றி சுருக்கியவாறு அதன் உள்ளே சென்று பார்த்தான்.

அதில் "உங்களுடன் இருக்கப் பிடிக்காமல் நான் தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்கிறேன்... பயப்படாதீங்க நான் சுமதியோட பொண்ணுன்னு சொல்ல மாட்டேன்..."
என்று கூறியிருந்தாள். குறுஞ்செய்தியை படித்துவிட்டு எனக்கு என்ன என்பதை போல் தோள்களைக் குலுக்கி விட்டு தனது வேலைகளை தொடர்ந்தான் ரிஷி வர்மன்...

அடுத்த நாள் காலை உணவின் போது தாத்தா பாட்டி, அத்தைமார்கள், மாமனார்கள் எல்லோருடனும் சேர்ந்து உணவு உட்கொண்டாள். உணவு உண்டு முடித்ததும் குமட்டிக் கொண்டு வருவது போலிருக்க சென்று உண்ட அணைத்தினையும் வாந்தி எடுத்தாள்.

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now