அத்தியாயம் 7

582 25 0
                                    

இவ்வாறே நாட்கள் செல்ல ரிஷியின் தங்கை அனிதாவும் அவள் கணவன் ராம் மற்றும் 3 வயது குழந்தை அபியுடனும் ஊட்டி வந்து சேர்ந்தாள் .
அவளின் வருகையை முன்கூட்டியே அறிந்ததால் அணைவரும் வீட்டிலேயே இருந்தனர்.

அவள் உள்ளே நுழைந்ததும் அணைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டு ஒவ்வொருவராக நலம் விசாரித்தனர்.

அவள் வந்ததை அறிந்த ரிஷி தங்கையை காண தனது அறையில் இருந்து வேகமாக கீழே வந்தான்.
அவனை கண்ட அபியோ " ஐ மாமா....." என அவனிடம் தாவினாள்.
அவளை அள்ளி அணைத்தவன் அவளுடன் பேசியவாறே சோஃபாவில் அமர்ந்து தங்கையையும் அவள் கணவனையும் வரவேற்றான்.

    அவனை கண்டதும் அனிதா " ஹாய் அண்ணா.... அண்ணி எங்க .... இன்னும் காணும்?
அவங்களை நான் பாக்கணும்...வர சொல்லு..."  எனக் கூறினாள்.

    அதற்கு ரிஷி பேசாமல் இருக்க ஆதிரனோ "அது ஒன்னும் இல்ல குட்டிம்மா உங்க அண்ணி குடும்ப குத்துவிளக்கு.....சோ... பத்து மணிக்கு தான் எந்திரிப்பாங்க.."
எனக் கூற அனிதா எல்லோர் முகத்தையும் பார்த்தாள்.

     அவர்களோ இதனை கவனிக்காதவர்கள் போல  அவரவர் வேலையில் இருந்தனர். அவளே சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக
"சரி சரி நான் அப்பறம் பார்த்துக்கிறேன்.." எனக் கூறி அங்கிருந்து அகல... வேலை விஷயமாக அப்போது உள்ளே நுழைந்தாள் அகல்யா..

"சாரி சார் ஒரு சின்ன பிராப்ளம் அதான்..." என மண்ணிப்பு வேண்டியவாறு ஜெகநாதனிடம் ஃபைலை நீட்ட  அவளை கூர்ந்து பார்த்த அனிதா " ஹேய்...நீ. ..... நீங்க அகல்யா தானே...ஆதி அண்ணா உங்களை இங்கேயே கூட்டிட்டு வந்துட்டானா?  அவனோட லவ்வ சொல்லிட்டானா???"
என ‌அடுக்கடுக்காக கேள்வி கேட்க அணைவரும் ஒரு சேர அவளையே பார்த்தனர்..

   அகல்யா லோ பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தாள். "யாரு இவங்க....அவரு தங்கச்சியா இருப்பாங்க போல...ஆனா என்னை எப்டி தெரியும்??
ஐயோ இவங்க ஏதாவது பிராப்ளம் பண்ணி இங்க இருந்து எங்கள அனுப்பிருவாங்களோ?
அப்படின்னா எங்களுக்கு கடைசி வரை ஃபேமிலி இல்லையா?"
என மனதில் பல எண்ணங்கள் ஓட வெளியே பயந்தவாறே நின்றிருந்தாள்.

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now