மேற்கூரையை வெறித்து பார்த்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தாள் ஹீனா. அவளருகில் வந்தமர்ந்தாள் இந்து.

"எங்க அம்மாவுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் அண்ணி" என்றாள்

"நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அவங்க செஞ்ச எந்த விஷயத்துக்கும் உனக்கும் எந்த தொடர்புமில்ல. நீ செய்யாத ஒரு தப்புக்காக, குற்ற உணர்ச்சியையோட இருக்க வேண்டிய அவசியமில்ல"

"அவங்களால தான் எல்லாருக்கும் கஷ்டம்... சீதாம்மா வாழ்க்கை நாசமா போச்சி... அண்ணன் தனியா இருந்தாரு... உங்களை கொல்ல ட்ரை பண்ணாங்க... அப்பா ஜெயிலுக்கு போயிட்டாரு... "

"அதெல்லாம் முடிஞ்சு போச்சு... எதையும் நம்மால மாத்த முடியாது. போனதை நெனச்சி கவலைப்படுறதை விட, அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிக்கணும்"

"அடுத்ததா? "

"உங்க அம்மாவுடைய இறுதி சடங்கு"

"அதை நான் செய்வேன்னு நீங்கள் நினைக்கிறீங்களா?"

"செஞ்சு தான் ஆகணும்"

"ஏன் செய்யணும்? அவங்க ஒரு மோசமான பொம்பள"

"ஆனா, நீ மோசமானவ இல்லையே... அவங்க மோசமானவங்க தான். ஆனா அவங்க செத்துட்டாங்க... உயிரில்லாத உடம்புகிட்ட நம்மளோட வெறுப்பைக் காட்டுறதுல என்ன பிரயோஜனம்? அது வெறும் உடம்பு... நம்முடைய கடமையை நம்ம செய்யணும்... ஒரு நல்ல மகளா அதை செஞ்சி முடி"

"நீங்க அண்ணனைப் பத்தி யோசிச்சு பாத்தீங்களா? அவருக்கு தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாரா?"

அப்போது பின்னாலிருந்து வந்த அர்ஜுனின் குரல் அவர்களை திடுக்கிட செய்தது.

"அதுல நான் வருத்தப்பட எதுவுமில்லை. உங்க அம்மாவுக்கு நீ செய்ய வேண்டிய கடமையை செய்து முடிக்க, நீ மத்தவங்கள பத்தி யோசிக்க வேண்டிய அவசியமில்ல" என்றான் அர்ஜுன்.

ஹீனா வாயடைத்துப் போனாள். அர்ஜுன், அவளிடம் நேரடியாகப் பேசுவது இது தான் முதல் முறை.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now