அத்தியாயம் -34

3.2K 167 10
                                    

இனியா வீட்டைவிட்டு போனதிலிருந்தே தன் மகன் நிம்மதியில்லாமல் இருக்கிறான் என்பதை விதுலனின் பெற்றோர்கள் அறிவார்கள்.  ஆனால் இந்த இரண்டு நாளும் அவன் இன்னும் அதிகமான வேதனையில் சுற்றுவது போல தெரிந்தது.  

அவர்களின் சந்தேகம் சரிதான்.  விதுலன் நிம்மதியில்லாமல் ஒரு படபடப்புடன் திரிந்தான் சதன்யா சொல்ல போகும் பதிலை நினைத்து.  காரணம் அவன் மனதில் தன் மனைவி மீது ஏற்பட்டிருந்த பிரியம். காதல் என்று அதற்கு பெயர் வைக்க அவன் விரும்பவில்லை.  எல்லா மனிதனுக்கும் காதல் என்பது ஒரு முறைதான் ஏற்படவேண்டும்.  அது அவனுக்கு லிட்டர் லிட்டராக சதன்யா மேல் பெருக்கெடுத்து ஓடியது.  அது கைகூடவில்லை என்று ஆனது கட்டிகொண்டவள் மீது அந்த காதல் ஆறு திசைமாறி பாய்கிறது என்று சொன்னால் கேவலம் என்று நினைத்தான் அவன். 

இனியா மேல் அவனுக்கு எழுந்த உணர்வுக்கு பிரியம் என்று பெயர் வைத்துக்கொண்டான் அவன். இனியாவின் மேல் அவனுக்கு இருக்கும் அன்பும், அக்கறையும், பிரியமும் அவனுக்கு வியப்பை தந்தது.  அவளின் பாசம், தேவைப்படும் நேரத்தில் கொடுக்கும் அரவணைப்பு, இவனின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தன் சுயத்தை மறைத்த அவளின் அக்கறை இது எல்லாம் அவனுக்கு சாகும் வரை தேவைப்பட்டது. 

 அவளின் 'ம்மா' என்ற அழைப்பு எரிமலையாக இவன் எரிகின்ற போது அதில் விழும் ஒரு துளி நீரை போன்றது.  ஆனால் அந்த ஒரு துளி நீருக்கு அந்த எரிமலையை குளிர்விக்கும் சக்தி இருந்தது. அது இவனின் கடைசி காலம் வரை தேவைப்பட்டது.  இதெல்லாம் நடக்கவேண்டும் என்றால் சதன்யா இவன் வாழ்க்கையைவிட்டு செல்ல வேண்டும்.  அவளுடனான தன் உறவை இவன் முழுதாக முடிவுக்கு கொண்டுவராமல் இனியா இவன் நிழலை கூட சீண்டமாட்டாள் என்பதை அவன் நன்கு அறிவான். அதனால் அவன் சதன்யாவை நினைத்து பயந்துக்கொண்டு இருந்தான்.  

"ஜெய் என்ன நடக்குது? சதன்யாவின் அப்பா மறுபடியும் நம்ம வசதியை பற்றி வெளியே விசாரிக்கிறதா கேள்விபட்டேன்.  இந்த சொத்து பாட்டனுடையதா? இல்ல என் சொந்த சம்பாத்தியமான்னு வேற கேட்டிருக்கிராரு? இதெல்லாம் எப்போ ஒரு முடிவுக்கு வரும்.  இன்னொரு முறை எங்களை அவமானப்படுத்திராதே! இனியாவுக்கு டிவோஸ் கொடுக்காமல் நீ இன்னொரு கல்யாணத்தைப்பற்றி யோசிக்க கூடாது. அப்புறம் சட்டம் உன் பக்கம் திரும்பிவிடும் பார்த்துக்க." என்றார் ஜெய்கணேஷ். 

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now