அத்தியாயம் - 26

3.8K 195 43
                                    

"ஜெய் கதவை திற, மன்னிப்பு எல்லாம் கேட்கமாட்டேன்.  நான் சரியாகத்தான் பேசினேன்.  நீதான் ஓவரா கோபப்பட்ட. ஒழுங்கா உன் தப்பை ஒத்துகிட்டு சாப்பிட வா. ஓயாமல் அடுப்படியில் போய் நிற்கமாட்டேன்.  கோபத்தோடு போறவன் அந்த சட்டினியை அரைத்து வச்சுட்டு போனான? உன்னால நான் வெறும் தோசையையும், பொடியையும் வச்சு சாப்ட்டுட்டு இருக்கேன்.  எவ்வளவு நல்ல மூடில் இருந்தேன், இப்படி எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டியே டெவில், கதவை திறடா பக்கி." என்று விடாமல் கை ஓய கதவை இடித்துக்கொண்டு நின்றாள் இனியா. 

இவளிடம் கோச்சுட்டு போனவன் உள்ளே இருந்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கிறான். அவனுக்கு கோபம்தான், ஆனால் அது இவள் மேல் அல்ல, தன்மேல். அவள் சொன்ன வார்த்தைக்கு இவன் செய்ய போன காரியம் என்ன? முத்தம்.. அதுவும் இதழ்முத்தம்.  நல்ல கோபம்தான்... இதுநாள் வரை எந்த பெண்ணிடமும் தோன்றாத கோபம்.  அவன் காதலியை கூட இவன் இந்தமாதிரி ஒரு எண்ணத்துடன் பார்த்தது இல்லை. எச்சில் பொருள் என்று சொன்ன இவளை போய் முத்தமிட போயிட்டானே!!! அந்த கோபத்தில் அவன் அடைத்துக்கொண்டு இருக்க இவள் வேற வெளியே இருந்து விடாமல் செவிப்பறையை கிழிக்கிறாள். 

எழுந்துபோய் அவன் பட்டென்று கதவை திறக்க ஒரு பக்க சுவற்றில் கையைவைத்துக்கொண்டு லேசாக ஹிப் மூமென்ட் போட்டபடி எங்கோ பார்த்துக்கொண்டு கதவைதட்டியவள், அவன் கதவை திறந்தது தெரியாமல் அவன் முகத்தில் தட்டினாள் ஓங்கி. 

"ஆஆ சனியனே!!" என்று அவன் அலற "ஓஓ சாரி.." என்றாள் இனியா பல்லை காட்டிக்கொண்டு. 

"என்னடி வேண்டும் இப்போ உனக்கு சட்டினிதான் முக்கியமா? வாயாடி இது கூவம் ஆறு.  பெண்ணாட்டி நீ பேய், பிசாசு." என்றான் அவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டிக்கொண்டு. 

"இருந்துட்டுபோறேன்.  நீ என்னை என்னவெல்லாம் பேசுற! எல்லாத்தையும் கேட்டுட்டு நான் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கேன் கெத்து குறையாம.  ஒரே ஒரு வார்த்தைக்கு இப்படி குதிக்குற? இந்த அழகில் என்னை எப்படியும் திட்டிக்கன்னு வேற சொன்ன." என்றாள் அவள் புருவத்தை தூக்கிக்கொண்டு.

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now