அத்தியாயம் -19

3.1K 173 31
                                    

'இப்போதான் தூங்கியது போல இருந்தது, அதற்குள் ஏழு மணி ஆகிவிட்டதா!!' என்று திகைத்து போய் இனியா போனில் அடித்திக்கொண்டிருந்த அலார சத்தத்தில் கண்ணை திறந்தான் விதுலன்.  இந்த வீட்டில் இவளுடன் தங்கிய நாள்முதல் நினைத்து மனதிற்குள் திட்டியிருக்கிறான் விதுலன் இனியாவின் இந்த அலார பழக்கத்தை பார்த்து.  

அதிகாலையில் எழுந்திருக்க அலாரம் வைத்து பார்த்திருக்கிறான்.  ஆனால் காலை ஏழு மணிக்கு எழும்ப அலாரம் வைக்கும் ஒரே அறிவு ஜீவி இந்த அம்மையார்தான்.  அந்த ஏழு மணி அலாரமும் எழும்புவதற்கு இல்லை. மறுபடியும் உருண்டு உருண்டு கூட அரைமணி நேரம் தூங்குவதற்கு.  அப்புறம் காலை, மதியம், இரவு என்று சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு அலாரம் வைப்பாள்.  அதுகூட பரவாயில்லை பகல் நேர தூக்கத்திற்கு ஒரு அலாரம் வைப்பாள் பாரு அதுதான் கொடுமை!!  ஏதாவது வேலையில் இருப்பாள், அலாரம் அடித்தவுடன் போய் படுத்து தூங்கிவிடுவாள்.  விசித்திர பிறவி! காட்டில் இருக்கவேண்டியது எல்லாம் நாட்டில் நடமாடிட்டு இருக்கு என்று மனதிற்குள் நினைத்துக்கொள்வான் வெளியே சொல்லமாட்டான். 

இன்று அலாரம் அடித்துக்கொண்டே இருக்க இனியா உடலை நெளித்து மெல்ல மெல்ல தூக்கத்தில் இருந்து விடுபட்டாள்.  'இவ நிறுத்த மாட்டா போல' என்று நினைத்தவன் போனை எட்டி எடுத்து அலாரத்தை நிறுத்த போனான். அது  மணி ஐந்து என்று காட்ட, கண்ணை கசக்கி தெளிவாக பார்த்தான்.  மணி ஐந்துதான் ஆகியிருந்தது.  

"என்னடா இது உலக அதிசயமாக இருக்கு?" என்று ஆச்சரியம் காட்டியவன் ஒருவழியாக எழுந்து அமர்ந்து விரிந்திருந்த தன் அடர்ந்த கூந்தலை கொண்டைபோட்டுக்கொண்டிருக்கும் இனியாவை பார்த்தான். 

"என்ன இது அதிசயமா இருக்கு சோம்பேறி மாடே!! பன்னி மாதிரி தூங்குவ.  இன்னைக்கு காலையிலேயே அலாரம் வச்சு எழுந்து பேய் மாதிரி உட்காந்திருக்க?" என்று கேட்டான் விதுலன். 

"காலையிலேயே நாயே பேயேன்னு திட்டாதே விது. அப்புறம் எனக்கு பொழுதெல்லாம் கெட்டதாகவே நடக்கும்." என்று அவள் சினுங்கினாள் கண்ணை சரியாக திறக்காமல் அரைகுறை தூக்கத்துடன். 

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now