அத்தியாயம் -10

3.4K 178 23
                                    

விதுலனுக்கு அவன் திருமணம் நின்றுபோனது வேதனையாக இருந்தாலும் அவன் காதலியின் பேச்சுதான் பெரிதாகப்பட்டது.  அவனுக்கு அவள்தான் முக்கியமாக இருக்கலாம்.  ஆனால் அவனை பெற்றோவர்களுக்கோ அவனின் நலன்தான் பெரிதாக இருந்தது.  அதனால் ஜெய்கணேஷ் ஒரு முடிவு எடுத்தார்.  

"ஜெய் நடந்து  முடிந்ததை நினைத்து பிரயோஜனம் இல்லை.  இனி நடப்பதை பார்ப்போம்.  இன்னைக்கே உனக்கு கல்யாணம் முடிந்தாகவேண்டும்.  அது உன் காதலியாக இருந்தாலும் சரி, இல்லை வேறு ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி." என்றார்.

"வாட்!! என்ன பேசுறிங்க? நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதா? அது நான் செத்தாலும் நடக்காது." என்றான் விதுலன் கோபத்துடன்.

"வேண்டாம்.. நீ வேற பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம்.  உன் காதலியையே திருமணம் செய்துக்க." என்றார் ஜெய்கணேஷ்.

"அப்பா அது இப்போ முடியாது." என்றான் அவன்.

"அப்போ நீ நான் சொல்லும் பெண்ணைத்தான் திருமணம் செய்துக்க வேண்டும், அதுவும் இந்த முகூர்த்தத்திலே." என்றார் அவர். 

"முடியாதுப்பா" என்றான் அவன் தீர்மானமாக.  

"அப்படின்னா நீ என்னையும், உன் அம்மாவையும் பார்ப்பது இதுதான் கடைசி நாள்.  மிரட்டுறேன்னு நினைக்காதே.  எனக்கு சொல்வதை மட்டும்தான் பேசி பழக்கம்." என்றார் அவரும் தீர்மானமாக.

"அம்மா அப்பா என்ன பேசிட்டு இருக்கார். என் வாழ்க்கையோடு விளையாடிட்டு இருக்கார்.  நீங்க எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?" என்று தாயாரிடம் திரும்பினான்.

"போதும் ஜெய்.  நான் உனக்காக பேசினவரைக்கும்.  நீ நல்லபடியாக வாழ்ந்து எங்களை சந்தோசபடுத்துவாய் என்று நினைத்ததற்கு நல்ல வேலை பார்த்துட்ட.  நாங்க எதுக்கு உனக்கு நடுவில் இருந்து உன் வாழ்க்கையை கெடுக்கணும்?  உன் இஷ்டம் போல செய்.  நான் என் கணவர் போகிற வழியில் அவர் கையைபிடித்துக்கொண்டுதான் போவேன்." என்று தாயாரும் முடித்துவிட விதுலன் தனக்காக பேச யாருமின்றி தவித்தான்.  சற்று நேரம்தான் அவனிடம் தவிப்பு இருந்தது.  அதற்குள் அவனுக்கு ஒரு தீர்வு கிடைத்தது போல இருந்தது.  

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now